soap
அழகை பராமரிக்க மட்டுமின்றி, உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் சோப்பு பயன்படுகிறது. மென்மையான சருமத்திற்கு சோப்பு, வறண்ட சருமத்திற்கு சோப்பு, எண்ணெய் சருமத்திற்கு சோப்பு, பளபளப்பான சருமத்திற்கு சோப்பு என பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. சோப்பை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்பு பாக்கெட்டில் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் ஏன் இடம்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சந்தையில் பல வகையான சோப்புகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் வெவ்வேறு சோப்பைப் பயன்படுத்துகிறார்களா? சந்தூர், லக்ஸ், பியர்ஸ்... எந்த சோப்பு எடுத்தாலும் அதில் ஒரு பொதுவான காரணி இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். ஆம். சோப்பின் பாக்கெட் தான் அது.
soap
நீங்கள் வெவ்வேறு சோப்புகளைப் பயன்படுத்தினாலும், சோப்பு கவரில் உள்ள ஒரு பொதுவான அம்சம் பாக்கெட்டில் உள்ள பெண்களின் புகைப்படமாகும். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களின் சோப்பு அட்டைகளிலும், சோப்பு விளம்பரங்களிலும் பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா.. ?அதாவது பெண்கள் தான் காலங்காலமாக குடும்ப சுகாதாரத்தை முதன்மையான பராமரிப்பாளர்களாக உள்ளனர். இதற்காகவே பெண்களின் புகைப்படம் சோப்பு பாக்கெட்டில் இடம்பெறுகிறது என்று கூறப்படுகிறது.
soap
இருப்பினும் இதனால், ஆண்கள் சோப்புகளைப் பயன்படுத்துவதில்லை என்று அர்த்தம் கிடையாது. ஆண்கள் சோப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதார பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் வியாபார நோக்கங்களுக்காகவே பெண்களின் படம் சோப்பு பாக்கெட்டில் இடம்பெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும் சோப்பு விளம்பரங்களில் பெண்களை சித்தரிப்பது முழுக்க முழுக்க மார்கெட்டிங் உத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் புகைப்படம் இருந்தால், விளம்பரம் கவர்ச்சியாக இருக்கும். அந்த குறிப்பிட்ட பிராண்டு அதிகமானோருக்கு எளிதில் சென்றடையும்.. இதன் காரணமாகவே சோப்பு விளம்பரங்களில் பெண்கள் மட்டுமே நடிக்கிறார்கள். எனினும் சமீபத்திய ஆண்டுகளில், தனிப்பட்ட சுகாதாரத் துறையில் ஆண்களின் அழகு, தோற்றத்தை மையப்படுத்தியும் விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சோப்புகள், கிரீம்கள், ஷாம்பு என அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் ஆண்களைக் கொண்ட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.