ஃப்ரிட்ஜில் முட்டைகளை வைக்க காரணங்கள்:
முட்டைகளை அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்துவதை விட அதை குளிரூட்டி பயன்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது. இதனால் முட்டையில் உள்ள நச்சுத்தன்மைகளை தடுக்க முடியும். முட்டையில் உள்ள பாக்டீரியாவான சால்மோனெல்லா பிரிட்ஜில் பலுகி பெருக வாய்ப்பில்லை. அதனால் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது என கூறப்படுகிறது.
ஃபிரிட்ஜில் முட்டைகளை வைப்பதால் அதனுடைய தாதுக்கள், மற்ற சத்துக்களை நாட்கள் ஆனாலும் அப்படியே பெற முடியும்.
சில சமயங்களில் ஃபிரிட்ஜில் வைக்கும் முட்டைகளின் சுவை மாறிவிடும். அதில் ஒரு புளிப்புச் சுவை வர வாய்ப்புள்ளது. ஆனால் அறை வெப்பநிலையில் வைத்திருப்பது அப்படி இருக்காது.
சால்மோனெல்லா பாக்டீரியாவிலிருந்து ஃப்ரிட்ஜில் உள்ள முட்டைகளை பாதுகாக்க முடியும்.
ஃப்ரிட்ஜில் வைக்கும் முட்டைகள் கிட்டத்தட்ட 28 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அறைவெப்பநிலையில் முட்டைகள் விரைவில் அழுகும். காலநிலைக்கு ஏற்ப அதன் சுவையும் மாறுபடும்.
அறைவெப்பநிலையில் சால்மோனெல்லா பாதிப்பு ஏற்பட்டுள்ள முட்டைக்கு அருகில் வைக்கப்படும் மற்றொரு முட்டையும் அதன் பாதிப்புக்கு உட்படும். ஃபிரிட்ஜில் வைப்பதால் இது மாதிரியான நுண்ணுயிரிகள் பரவுதலை தடுக்க முடியும்.