வேலை அழுத்தம், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மனநலனை காக்க 'ஜென் ஜி' பிரிவினர் 'மைக்ரோ டிடாச்மென்ட்' (குறைந்தபட்ச விலகல்) முறையை கையாண்டு வருகின்றனர். தேவையற்ற விஷயங்களில் இருந்து மனதளவில் விலகியிருக்கும் இந்த புதிய வாழ்வியல் பற்றி காண்போம்.
இன்றைய அவசர உலகில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, கல்விச் செலவுகள் மற்றும் உலகளாவிய பதற்றங்கள் போன்ற பல காரணங்களால் ஜென் ஜி (Gen Z) தலைமுறையினர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நவீன கால அழுத்தங்களை எதிர்கொள்ளவும், தங்களின் மன அமைதியைப் பாதுகாக்கவும் அவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புதிய வாழ்வியல் முறைதான் ‘மைக்ரோ டிடாச்மென்ட்’ (Micro-detachment) எனப்படும் ‘குறைந்தபட்ச விலகல்’ ஆகும்.
26
மைக்ரோ டிடாச்மென்ட் என்றால் என்ன?
சுருக்கமாகச் சொன்னால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் மற்றும் தேவையற்ற எதிர்மறைச் சூழல்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து மனதை வருத்திக்கொள்ளாமல் இருப்பதுதான் இது. எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிப்பூர்வமாக அளவுக்கு அதிகமாக ஈடுபடாமல், தங்களின் மனநலனுக்காகச் சற்று தள்ளியே இருக்கும் ஒரு தற்காப்புப் பழக்கம் இதுவாகும்.
36
விலகலுக்கான முக்கியக் காரணம் :
பணியிடத்திலோ அல்லது உறவுகளிலோ நாம் காட்டும் அதீத அன்பிற்கும் உழைப்பிற்கும் தகுந்த அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காதபோது இந்த விலகல் உணர்வு ஏற்படுகிறது. ஒரு நபர் மட்டுமே அந்தப் பிணைப்பைத் தக்கவைக்க தொடர்ந்து போராடி சோர்வடையும்போது, அவர்கள் சத்தமில்லாமல் மனதளவில் அந்த இடத்தை விட்டு விலகிவிடுகிறார்கள்.
இது பார்ப்பதற்குப் பொறுப்பற்ற குணம் அல்லது கல்நெஞ்சம் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது சுயநலமல்ல; தங்களை ‘பேர்ன்அவுட்’ (Burnout) எனப்படும் அதீத வேலைப் பளு சோர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாப்பு அரண் (Coping Mechanism) என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
56
பணியிடத்தில் அமைதியான புரட்சி:
அலுவலக அரசியல், பாரபட்சம் போன்றவற்றால் தங்களின் நிம்மதியை இழக்க ஜென் ஜியினர் தயாராக இல்லை. தங்களின் உணர்ச்சிப்பூர்வமான ஆற்றலை (Emotional Energy) வீணாக்காமல் இருக்க, அவர்கள் வேலையைத் தாண்டிய தேவையில்லாத விவாதங்களில் இருந்தும், போட்டி நிறைந்த சூழலில் இருந்தும் தங்களை அமைதியாகத் துண்டித்துக் கொள்கிறார்கள்.
66
ஆரோக்கியமான எல்லையை வகுத்தல் :
இந்த விலகல் என்பது எல்லோரிடமிருந்தும் ஓடி ஒளிவதல்ல. தங்களின் நிம்மதியைக் கெடுக்கும் நச்சுச் சூழல்களில் இருந்து மட்டுமே அவர்கள் விலகுகிறார்கள். அதே நேரத்தில், தங்களுக்குப் பிடித்தமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தங்களின் உண்மையான அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறுவதில்லை. இது ஆரோக்கியமான ஒரு எல்லையை வகுக்கும் கலையாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.