LifeStyle: படுக்கையின் மீது இரண்டு டவல் அன்னப் பறவைகளும், அதைச் சுற்றித் தூவப்பட்டிருக்கும் ரோஜா இதழ்களும் நம்மை வரவேற்றால் எப்படி இருக்கும்? சட்டென்று நம் சோர்வெல்லாம் பறந்து போவது மட்டுமல்லாமல் குஷியாகிவிடும்.
நீண்ட தூரப் பயணத்தின் களைப்போடு நாம் ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழையும்போது, படுக்கையின் மீது இரண்டு டவல் அன்னப் பறவைகளும், அதைச் சுற்றித் தூவப்பட்டிருக்கும் ரோஜா இதழ்களும் நம்மை வரவேற்றால் எப்படி இருக்கும்? சட்டென்று நம் சோர்வெல்லாம் பறந்து போவது மட்டுமல்லாமல் குஷியாகிவிடும் அல்லவா. ஆனால், இது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணமும், வரலாறும் ஒளிந்திருக்கிறது.
25
உல்லாசக் கப்பலில் பிறந்த கலை
20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், 'Cruise Ships' எனப்படும் பிரம்மாண்ட உல்லாசக் கப்பல்களில் தான் இந்த 'டவல் ஆர்ட்' முதன்முதலில் பிரபலமானது. கப்பலில் நீண்ட நாட்கள் பயணிக்கும் பயணிகளை மகிழ்விப்பதற்காக, அங்கிருந்த ஊழியர்கள் டவல்களைக் கொண்டு யானை, குரங்கு, அன்னம் என பல்வேறு விலங்குகளின் வடிவங்களைச் செய்து அசத்தினார்கள். பயணிகளிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, இந்த உல்லாசக் கப்பல் கலை அப்படியே உலகம் முழுவதும் உள்ள சொகுசு ஹோட்டல்களுக்கும், ரிசார்ட்டுகளுக்கும் பரவி கிடைக்கிறது.
35
அன்னப் பறவைகளும் 'ஹார்ட்' வடிவமும்
ஏன் பெரும்பாலான ஹோட்டல்களில் 'அன்னப் பறவை' வடிவத்தையே தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? அன்னம் எப்போதுமே அன்பு, கம்பீரம் மற்றும் தூய்மையான அழகின் அடையாளமாக கருதப்படுகிறது. இரண்டு அன்னங்கள் நேருக்கு நேர் மூக்கை உரசிக்கொண்டு நிற்கும்போது, அவற்றின் கழுத்துப் பகுதி இயற்கையாகவே ஒரு 'ஹார்ட்' (இதயம்) வடிவத்தை உருவாக்கும்.
இதன் காரணமாகவே தேனிலவு செல்லும் தம்பதியரின் அறைகளில் இந்த வடிவத்தை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சாதாரண டவலை இப்படிப்பட்ட வடிவமாக மாற்றுவதற்குத் தனித்திறமையும், மிகுந்த பொறுமையும் தேவை. தங்களின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் எந்தளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பது இதை பார்க்கும் போது தெரிகிறது.
55
பிசினஸ் ஹோட்டல்களில் இது ஏன் இருப்பதில்லை?
இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவசர அலுவல் நிமித்தமாக வந்து தங்கும் 'பிசினஸ் ஹோட்டல்களில்' இந்த டவல் கலை பெரும்பாலும் இருக்காது. ஆனால், விடுமுறையைக் கொண்டாடவும், மன அமைதியைத் தேடியும் மக்கள் செல்லும் 'லெஷர் ரிசார்ட்டுகளில்'வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரிலாக்ஸான, சந்தோஷமான உணர்வைக் கொடுக்க இந்த 'டவல் அன்னங்கள்' இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.