பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோரை எதிர்த்து பேசுவதை நாம் பார்த்திருப்போம். உங்கள் குழந்தையும் எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுகிறார்களா? அவர்களுக்கு எப்படி பதிலளிக்கலாம். மரியாதை, எல்லை மற்றும் விளைவுகள் பற்றி உங்கள் குழந்தை எவ்வாறு கற்றுக்கொள்கிறது என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் குழந்தைகளின் இந்த நடத்தையை மாற்றலாம். அதற்கான சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் துணையுடன் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்று பாருங்கள்
குழந்தை வளர்ப்பில் தாய் தந்தையரின் உரையாடல் மிக முக்கியமானது. பெற்றோர்கள் பேசும்போது, ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லும்போது, குழந்தை கேட்கிறது. பல நேரங்களில், குழந்தை வேடிக்கையாக இருப்பது போலவும், தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் பற்றி கவலைப்படாமல் இருப்பது போலவும் தெரிகிறது.