
நாம் எவ்வளவு காஸ்ட்லியான உணவுகளை வாங்கி சாப்பிட்டாலும் அது ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே நீண்ட நாள் வாழ முடியும். ஆனால், சில உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தும் குறைந்த விலையிலும், மார்க்கெட்டிலும் எளிதாக கிடைக்கும். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் வெள்ளம் மற்றும் உப்பு கடலை. பலரும் இதை ஸ்னாக்ஸ் ஆக விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, தொற்று நோயிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. சொல்லப் போனால் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
உப்புக்கடலையில் உள்ள சத்துக்கள்
உப்பு கடலையில் புரோட்டின், கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உப்புக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் எனவே உப்புக்கடலை மற்றும் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இதுவரை உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படிங்க: வெல்லமா? தேனா? வெயிட் லாஸ் பண்றதுக்கு எது நல்லது? தெரிஞ்சுக்க இதை படிங்க!
வெல்லம் மற்றும் உப்புக்கடலை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
1. மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
வெல்லம் மற்றும் உப்பு கடலியை சேர்த்து சாப்பிடுவதால் அதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயல் திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர உங்களது மனநிலையை ஒழுங்குபடுத்தவும், மன அழுத்தத்தை சமாளிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் மன சோர்வாக இருக்கும் போதெல்லாம் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுங்கள்.
2. ரத்த சோகைக்கு நல்லது
வெல்லாம் மற்றும் உப்புக்கடலை இரும்பு மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது.
3. மாதவிடாய் காலத்தில் நல்லது
வறுத்த கடலையில் புரதச்சத்தும், வெல்லத்தில் இரும்பு சத்தும் உள்ளதால் இவை இரண்டும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த இலப்பை சரி செய்ய உதவுகிறது.
4. செரிமான பிரச்சனையை போக்கும்
வெல்லம் மற்றும் உப்புகடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை செரிமான மண்டலத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. எனவே நீங்கள் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உப்பு கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடுவீர்கள்.
5. எடையை குறைக்கும்
தினமும் வெல்லம் மற்றும் வறுத்த கடலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும். இதனால் உங்களது எடையும் வேகமாக குறையும்.
6. முகம் பொலிவாகும்
உங்கள் முகம் பொலிவிழிந்து காணப்பட்டால் சந்தைகளில் விற்பனை ஆகும் கண்ட கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தினமும் வறுத்த வேர்கடலை மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் முகம் மற்றும் சருமமும் பொலிவாகும்.
7. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நீங்கள் அடிக்கடி உடல்நிலை குறைவால் பாதிக்கப்படுவீர்கள். எனவே உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட வறுத்த கடலை மற்றும் வெல்லம் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
8. விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
வெள்ளம் மற்றும் உப்புக்கடலை ஒன்றாக சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாகும்.. முக்கியமாக இதை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: உப்புக்கடலை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?