நாம் அன்றாட வாழ்வில் பல பொருட்களையும் சாதனங்களையும் பயன்படுத்துகிறோம். அதில் பல பொருட்கள் ஒரே வடிவத்தில் இருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கின்றன. ஏன் எல்லா பிளேடுகளும் ஒரே வடிவில் தயாரிக்கப்படுகின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது எல்லா நிறுவனங்களின் பிளேடுகளிலும் ஏன் நடுப்பகுதி காலியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
எல்லா பிளேடுகளுமே நடுவில் துளைகளுடன் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இது தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள பிளேடுகளின் வரலாற்றை பற்ரி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Blade Shapes
1901 ஆம் ஆண்டு வில்லியம் நிக்கர்சனின் உதவியுடன் ஜில்லெட் நிறுவனத்தின் நிறுவனர் கிங் கேம்ப் ஜில்லெட் என்பவரால் முதன்முதலில் பிளேடு தயாரிக்கப்பட்டது. அதே ஆண்டில், அவர் பிளேடின் காப்புரிமை பெற்றார், பின்னர் அதன் உற்பத்தி 1904 இல் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு சுமார் 165 பிளேடுகள் செய்யப்பட்டன.
Blade Shapes
அந்த காலக்கட்டத்தில் பிளேடுக்கு ஷேவிங் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. அந்த 3 துளைகள் தேவைப்படும் ரேஸருக்கு பொருந்தும் வகையில் பிளேடு வடிவமைக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், ஜில்லெட் மட்டுமே ஷேவிங் செய்ய பயன்படும் ரேஸர்களை தயாரித்தார். இதன் காரணமாக, ஜில்லெட் இந்த குறிப்பிட்ட வடிவத்தில் அதன் பிளேடுகளை வடிவமைத்தது.
இருப்பினும், பிற்காலத்தில், பல நிறுவனங்கள் பிளாடு வியாபாரத்தில் இறங்கினாலும், ஜில்லெட் நிறுவனம் மட்டுமே ரேஸர்களின் ஒரே உற்பத்தியாளராக இருந்தது. இதனால் அனைத்து ஷேவிங் ரேஸர்களுக்கும் பொருந்தும் வகையில் மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் பிளேடுகளை ஒரே மாதிரியான வடிவத்தில் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Blade Shapes
இருப்பினும் காலம் மாற மாற பிளேடுகள் மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தத் தொடங்கின. ஆனால் பிளேடின் வடிவமைப்பு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. 1904-ம் ஆண்டு வெறும் 165 பிளேடுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்றைய காலத்தில், தினமும் சுமார் 1 மில்லியன் பிளேடுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அனைத்து பிளேடுகளும் ஒரே வடிவத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Blade Shapes
ஆனால் ரேசர்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு நம் முன்னோர்கள் சருமத்தில் இருந்து முடியை அகற்ற கூர்மையான சில கருவிகளையே பயன்படுத்தினர். கி.மு 3000 காலக்கட்டத்தில் செப்பு கருவிகள் உருவாக்கப்பட்டது. அப்போது தான் செப்பு ரேஸர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவிக்கின்றனர்.