யார் வெந்நீரில் தேன் கலந்து குடிக்கக்கூடாது?
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் தேனை வெந்நீரில் கலந்து குடிக்கக்கூடாது. ஏனெனில் தேனில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட இயற்கை இனிப்பு உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. தேனை வெந்நீரில் கலந்து குடித்தால் அதன் விளைவு அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அசிடிட்டி, வயிற்றுப் பிரச்சினைகள்: அசிடிட்டி, வயிற்றுப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேன், வெந்நீர் இரண்டையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேனை அதிகமாக உட்கொள்வது செரிமானப் பிரச்சினைகளை அதிகரிக்கும். தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. வெந்நீருடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது வயிற்றில் அசிடிட்டியை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், அஜீரணம் போன்றவை ஏற்படும்.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் சிலருக்கு வயிற்று உப்புசம், வாயுத் தொல்லைகள் ஏற்படும். ஏனெனில் தேனில் நொதிக்க வைக்கப்பட்ட சர்க்கரை உள்ளது, இது செரிமான செயல்முறையைப் பாதிக்கிறது. வெதுவெதுப்பான நீர், தேனை அதிக அளவில் உட்கொள்வது அல்லது வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று உப்புசம், வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும்.