கோவக்காய் மட்டுமின்றி அதனுடைய இலைகள், தண்டு, வேர், காய், கனி போன்றவையும் மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கோவக்காய் இலைகள் தோல் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, தோல் வெடிப்புகளை அகற்ற கோவக்காயின் இலைகளை பயன்படுத்தலாம். வெறும் தோல் நோய்கள் மட்டுமல்ல காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கும் கோவக்காய் நல்லது.
கோவக்காயின் இலைகளையும், தண்டினையும் கஷாயம் செய்து குடித்தால் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு போன்ற நோய்களுக்கு நல்லது. பித்தம், வயிற்றில் உள்ள பூச்சி போன்றவை குணமாக கோவக்காய் நல்ல மருந்தாக இருக்கும். கோவக்காய் இலைகளை பறித்து அதனை நன்கு மையாக அரைத்து அத்துடன் வெண்ணெய் ஏதேனும் மோதி அடிபட்டதால் ஏற்பட்ட காயங்கள், புண்கள், தோல் நோய்கள் குணமாக பயன்படுத்தலாம்.