
மழைக்காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் பல இடங்களில் மழை பெய்கிறது. மழைக்காலம் குளிர்ச்சியை கொடுத்தாலும் கூடவே பலவிதமான நோய்த்தொற்றுகளையும் கொடுத்து விடும். அதாவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே இவற்றை தடுக்கவும் அவர்களது உடலை வலுவாக வைக்கவும் மழைக்காலத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம்.
அத்தகைய உணவுகளில் ஒன்று தான் பூண்டு. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. பூண்டு மழைக்கால தொற்றுகளில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது. இஇத்தகைய சூழ்நிலையில் மழை காலத்தில் குழந்தைகள் சளி, இருமல், காய்ச்சலால் அதிகமாகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே அவற்றை கட்டுப்படுத்த பூண்டு பால் செய்து கொடுங்கள். இப்போது இந்த பதிவில் பூண்டு பால் நன்மைகள் மற்றும் ரெசிபி பற்றி இங்கு பார்க்கலாம்.
பூண்டு பால் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூண்டில் ஆன்டிவைரஸ் பண்புகள். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்க பூண்டு பால் கொடுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் கூட பூண்டு பால் கொடுக்கலாம். ஏனெனில் பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்கும். அதுபோல பாலில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கப் பூண்டு பால் கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோய்களும் அவர்களது செல்களில் நுழைவதை தடுக்க உதவுகிறது.
நல்ல தூக்கம் வரும்
பொதுவாகவே குழந்தைகள் தூங்குவதில் சிரமமாக இருக்கும். அதுவும் மலைகாலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தால் சொல்லவே வேண்டாம். இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு பூண்டு பால் கொடுத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். ஏனெனில் பூண்டில் அல்லிசின், துத்தநாகம் போன்ற கலவைகள் இருப்பதால், அவை அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கும்.
எந்த வயதில் கொடுக்கலாம்?
ஒரு வயது ஆன பிறகு குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பூண்டு பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். வயதிற்கு ஏற்றார் போல அளவை அதிகரிக்கவும். பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை என்று கணக்கில் கொடுத்த பின் இரண்டு முறை கொடுக்கலாம். அதுவும் இரவு நேரங்களில் கொடுங்கள்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!
பூண்டு பால் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பால் - 1/2 கப்
பூண்டு - 4
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு - சிறிதளவு
செய்முறை
பூண்டின் தோலை பூண்டு பால் செய்ய முதலில் பூண்டின் தோலை உரித்து மசித்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அதில் இனிப்பிற்கு கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு முறை கொதிக்க விடுங்கள். இறுதியாக ஏலக்காய் பொடி தூவவும்.
இந்த பாலை நீங்கள் வடிகட்டாமல் அப்படியே குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் நல்லது.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!