
நட்ஸ்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம், பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை, முந்திரி போன்றவை நட்ஸ்களாகும். இவை அனைத்தும் நம்முடைய ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. இன்னும் சொல்லப்போனால் நட்ஸ்கள் 'சூப்பர் ஃபுட்' என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில் அவற்றில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அதாவது அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால்தான் நட்ஸ்களை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நட்ஸ்களை தினமும் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் பல கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். மேலும் நட்ஸ்கள் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிக்க 'இப்படி' பண்ணா போதும்!!
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை நட்ஸ்கள் நமக்கு வழங்கினாலும் அவை அனைவரும் சாப்பிடுவதற்கு பயனுள்ளதாக இருக்காது. ஆம், உடலில் சில பிரச்சனையுள்ளவர்கள் நட்ஸ்கள் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நட்ஸ்களின் நுகர்வு அத்தகையவர்களுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே, உடலில் எந்த பிரச்சனை உள்ளவர்கள் நட்ஸ்களை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: Cashew vs Peanut: முந்திரி vs நிலக்கடலை - உடலுக்கு வலு சேர்ப்பதில் எது பெஸ்ட்?
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்:
நாட்களில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் நீங்கள் நட்ஸ்களை சாப்பிடும் போது அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும் மற்றும் நீண்ட நேரம் எடுக்கும். அதுமட்டுமின்றி வாயு, குடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் குறிப்பாக பாதாம் தோலில் இருக்கும் டானிக், செரிமான கோளாறு ஏற்படுத்தும். இதனால் சிலருக்கு குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் நீங்கள் நட்ஸ்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்:
நாட்களில் இருக்கும் கொழுப்பு அமிலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையை மேலும் மோசமாக்கும். எனவே உங்களுக்கு நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனையை இருந்தால் நீங்கள் ஒருபோதும் நட்ஸ்கள் சாப்பிட வேண்டாம்.
அலர்ஜி உள்ளவர்கள்:
பிற உணவுகளைப் போலவே சிலருக்கு நட்ஸ்களால் அலர்ஜி ஏற்படும். அதாவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவற்றை சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு நாட்களால் அலர்ஜி அலர்ஜி பிரச்சனை இருந்தால் நீங்கள் நட்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தோல் வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பெருங்குடல் அலர்ஜி உள்ளவர்கள்:
பெருங்குடல் அலர்ஜி காரணமாக வயிற்றுப்புண் கொப்புளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எந்த உணவை சாப்பிட்டாலும் ஜீரணிக்க மிகவும் கடினமாக இருக்கும். மேலும் குடலில் எரிச்சல் ஏற்படும். உங்களுக்கு பெருங்குடல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் நீங்கள் நட்ஸ்கள் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றின் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் அது உங்களது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். மேலும் சில சமயங்களில் குடல் இயக்கத்தால் ரத்தப்போக்கு பிரச்சனை கூட ஏற்படும்.