
வீட்டுக்குள் நுழையும் போது, கால்களில் உள்ள மண் மற்றும் தூசி போன்றவற்றை வாசலிலேயே உதறி விட்டு வருவதற்காகவும், கால் கழுவிவிட்டு உள்ளே வருபவர்கள் பாதங்கள் ஈரமாக இருக்கும் என்பதால், அவர்களின் பாதங்களை உலர வைக்கும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் டோர் மேட் பயன்படுத்த படுகிறது. இதனால் டோர் மேட் மிகவும் சீக்கிரமாக அழுக்காகி விடுகின்றன.
இப்படி அழுக்கான டோர் மேட்டை எப்படி எளிமைய முறையில் சுத்தம் செய்யலாம் என்பதை பார்ப்போம். பொதுவாக டோர் மேட்டை கையால் நீங்கள் வாஷ் பண்ணுவதை விட இயந்திரத்தில் சுத்தம் செய்வது சிறந்தது. ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு நிரப்பி, டோர் மேட்டை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது அழுக்கை தளர்த்துகிறது, இதன் பின்னர் தண்ணீரில் 2 அலசல் விட்டு வாஷிங் மெஷினில் போட்டால் உங்கள் வீட்டு மிதியடி பளீச் என ஆகிவிடும்.
தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவுக்கு அரியவகை விடிலிகோ பிரச்சனை!
டோர் மேட்டை சுத்தம் செய்வதற்கு முன், முதலில் அதில் ஒட்டி இருக்கும் அழுக்கு மற்றும் தூசியை அகற்றவும்; இல்லையெனில், தண்ணீர் சேர்த்தால் அதில் ஒட்டிக் கொண்டு அப்படியே தங்கி விடும். அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற அதை உதறி விட்டு பின்னர் சில நிமிடம் வெயில் படும் இடத்தில் வைத்து விட்டு பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.
சம அளவு வெதுவெதுப்பான நீர் மற்றும் வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து, இந்தக் கரைசலை டோர் மேட்டில் தெளிக்கவும். இது அழுக்கை மிகவும் விரைவாக தளர்த்தி கொடுக்கும். இதன் பின்னர் நீங்கள் டோர் மேட்டை கைகளால் அல்லது மெஷினில் வாஷ் செய்து கொள்ளலாம்.
நண்பனையே காதலித்து கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து!
டோர் மேட்டை ஆழமாக சுத்தம் செய்வதற்கு, ஹைட்ரஜன் பெராக்சைடும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சம அளவு தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடை கலப்பதன் மூலம் ஒரு கரைசலைத் தயாரித்து அதில் காலணி விரிப்பில் தெளிக்கவும், சில நிமிடங்கள் அதில் டோர் மேட்டை ஊறவைத்து விட்டு, பின்னர் ஒரு ஸ்க்ரப் வைத்து தேய்த்து கைகளால் கூட எளிதில் டோர் மேட் அழுக்கை சுத்தம் செய்து விடலாம்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய டோர் மேட்டை மாற்றுவது சிறந்தது. ஒரு வேலை வாஷ் ரூம் சென்று விட்டு... உங்கள் கால்களை டோர் மேட்டில் உணரவைக்கும் போது அதில் பாக்டீரியா அதிகமாக இருக்கும், எனவே அதிக அளவு அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. 2 -3 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பதால் அதிக அழுக்கும் சேராது துவைப்பதற்கு எளிதாக இருக்கும்.