இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. அரசியல் சட்டங்களும் அதற்கேற்றார் போல எழுதப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் ஆண் வாரிசுகளை போல பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. முன்னோரின் சொத்துக்களிலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு. ஆனால் கல்யாணத்திற்கு பின் மனைவியின் சொத்து மீது கணவனுக்கு உரிமை உண்டா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. கணவன் தனது மனைவியின் சொத்தை அவரிடம் அனுமதி கோராமல் விற்க முடியுமா? என இந்த பதிவில் காணலாம்.
24
can a husband sell his wife's property in tamil
கணவன் சொத்து:
கணவன் தன் உழைப்பில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் அவருக்கு சொந்தமானது. அதில் மனைவிக்கு எந்த உரிமையுமே கிடையாது. ஆனால் ஒரு ஆண் தன் மனைவி பெயரில் சொத்து வாங்கினால் அதில் மனைவிக்கும் முழு உரிமை உண்டு. அதை அவர் விற்கவும் அனுமதி உண்டு. ஆனால் கணவன் அதை மீண்டும் விற்க நினைத்தால் மனைவி ஒப்புதல் அளிக்க வேண்டும். அவருடைய நிதியில் வாங்கினாலும் அது மனைவி பெயரில் இருந்தால் ஒப்புதல் பெறவேண்டும். ஒருவேளை கணவன், மனைவி விவாகரத்து வாங்கும்பட்சத்தில் மனைவி சட்டப்பூர்வமான உரிமையாளராக இருந்தால் கூட கணவரால் அந்த சொத்தை வாங்க முடியும். அதற்கு கணவர் தான் முதலீடு செய்ததை அதாவது அந்த வீட்டிற்கு லோன் கட்டியதை நிரூபிக்கவேண்டும். அப்படியிருந்தால் அதன் உரிமையை கோரலாம்.
34
can a husband sell his wife's property in tamil
யாருக்கு உரிமை?
சொத்தை விற்பதற்கு முதலில் அந்த நபர் பெயரில் அச்சொத்து பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். உரிமை இல்லாமல் அதை விற்க முடியாது. தன்னுடைய
மனைவியின் சொத்தை கணவனால் அவருடைய அனுமதியின்றி விற்க முடியாது. மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்தை விற்க கணவர் முதலில் மனைவியின் ஒப்புதல் பெறவேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு ஆண் மரணமடைந்தால் அவர் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை அவருடைய தாய், மனைவிக்கு வழங்குவதை சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் திருமணமான பெண்ணின் மரணத்திற்கு பின் அவளுடைய கணவன், குழந்தைகளுக்கு தான் அவளுடைய சொத்து சேரும். ஆனால் மரணத்திற்கு முன் அந்த நபர் தன் சொத்து உரிமைகள் பற்றி உயில் எழுதியிருந்தால் அதற்கு ஏற்றபடி உரிமைகள் மாறும்.