
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டுமின்றி, மன ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த பழக்கங்கள் தான் அவர்களது ஆளுமையை உருவாக்க உதவும்.
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் தான் அவர்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் வரும். எவ்வளவுதான் பாசிடிவ் சிந்தனைகள் வந்தாலும் கூடவே எதிர்மறை சிந்தனைகளும் வருவது சகஜம் தான். குழந்தைகளிடம் எதிர்மறை சிந்தனை வந்தால் அவர்கள் தங்களுக்கு பிரியமானவர்கள் மீது கூட வெறுப்பை காட்டுவார்கள். அதுமட்டுமின்றி குழந்தைகளிடம் தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கும். குழந்தைகளிடம் இருக்கும் எதிர்மறை சிந்தனையை பெற்றோர்கள் கண்டுபிடித்து அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே இந்த பதிவில் குழந்தைகளிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி அவர்களை பாசிட்டிவாக மாற்றும் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள்..
இதையும் படிங்க: நல்ல பெற்றோர் 'இத' பண்ணமாட்டாங்க.. குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடாத '5' தவறுகள்!!
எது சரி? எது தவறு? என்று சொல்லிக் கொடுங்கள்:
குழந்தைகளிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்க எது சரி? எது தவறு? என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். அவர்கள் விளையாடும் போதோ அல்லது ஏதாவது ஒரு விஷயங்களை செய்தாலோ சரி.. தவறு பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்கும் போது அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் மாறும் மற்றும் நேர்மறை எண்ணங்கள் வர ஆரம்பிக்கும்.
நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்:
உங்கள் குழந்தை எதிர்மறையாக சிந்திப்பதை தடுக்க முதலில் நீங்கள் உங்களை பாசிட்டிவாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் பாசிட்டிவாக இல்லை என்றால் உங்கள் குழந்தையும் உங்களைப் போலவே இருக்கும். காரணம் உங்கள் குழந்தை உங்களை பார்த்து தான் வளரும். மேலும் நீங்கள் நேர்மறையாக இருக்கவில்லை என்றால் அதனால் உங்கள் குழந்தை மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படும். உங்களிடம் மன அழுத்தம், பதட்டம் அதிகமாக இருந்தால் அதனால் உங்கள் குழந்தை தான் எதிர்மறைகள் அதிகம் பாதிக்கப்படும்.
பிரச்சனையை புரிந்து கொள்ளுங்கள்:
பொதுவாக குழந்தைகள் வளர வளர தங்களது பிரச்சனையை வெளிப்படையாக சொல்லவே மாட்டார்கள். அவர்கள் அதை தங்களது மனதிற்குள் வைத்து சிரமப்படுவார்கள். மேலும் இதனால் அவர்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் குழந்தையின் நடத்தையில் ஏதேனும் மாற்றத்தை நீங்கள் கண்டால் உடனே அவர்களிடம் அதற்கான காரணத்தை கேளுங்கள். ஒரு குழந்தை உங்களிடம் வெளிப்படையாக பேசும் படி சொல்லுங்கள். அவர்கள் ஏதாவது பிரச்சனையில் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, எது சரி எது தவறு என்று எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையை புரிந்து கொள்வதன் மூலம் அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் வரவே வராது. உங்களிடம் தங்களது பிரச்சினையை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிங்க: குழந்தைங்க தப்பு பண்ணா தண்டனையா? அதை விட இந்த முறை தான் சிறந்தது!!
குழந்தையின் கவனத்தை திசை திருப்புங்கள்:
இதற்கு குழந்தைகளிடம் புதிய திறன்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் கவனம் எதிர்மறை எண்ணங்களில் இருந்து நேர்மறைக்கு மாறும். குழந்தைகள் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க தொடங்கும். மேலும் அவர்கள் புதிய விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளிடம் நேரம் ஒதுக்குங்கள்:
பொதுவாக குழந்தைகளிடம் எதிர்மறை எண்ணங்கள் வந்தால் முதலில் அவர்களது நடத்தையில்தான் மாற்றம் ஏற்படும். உதாரணமாக அவர்கள் எல்லோரிடமிருந்தும் விலகி இருப்பார்கள். மேலும் என்ன விஷயங்களைப் பேசினாலும் அதை எதிர்மறையாகவே புரிந்து கொள்வார்கள் எனவே இதிலிருந்து உங்கள் குழந்தையை விடுவிக்க முதலில் அவர்களளிடம் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதற்கு அவர்களுடன் வாக்கிங் செல்லுங்கள், விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். முக்கியமாக, உங்களால் முடிந்தால் குழந்தையை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.