உங்க வயசுக்கு எத்தனை புஷ்-அப் செய்யனும்? இதனால 60 வயசுல ஆரோக்கியமா இருக்கலாம்!! 

First Published | Jan 4, 2025, 9:12 AM IST

Push-Up Goals By Age : ஒரு நாளைக்கு 40 தண்டால் (push ups) எடுப்பவர்களுக்கு  இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. 

Push-ups for overall health in tamil

உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என உங்களுக்கு தெரியும். ஆனால் ஒரே ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்வதால் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என அறிவீர்களா? நீங்கள் தொடர்ந்து தண்டால் (push ups) செய்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.   நீங்கள் தண்டால் எடுப்பதால்  உங்களுடைய முழு உடலுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக உங்களுடைய மேல் உடலில் கைகள், மார்புப்பகுதி போன்றவை வலுப்பெறுகின்றன. ஒவ்வொருவரும் அவருடைய வயது கேற்றபடி தண்டால் எடுப்பது பலனளிக்கும். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: மகனை மிஞ்சிய அம்மா... 81 வயதில் சேலையில் தண்டால் எடுத்து அசத்தும் பிரபல நடிகரின் தாய்! வீடியோ..!

Push-Up Health Benefits in Tamil

தண்டால் எடுப்பதன் நன்மக்கள்; 

தொடர்ந்து தண்டால் (புஷ் அப்) எடுப்பது உங்களுடைய எடை மேலாண்மையை பராமரிக்க உதவிபுரிகிறது. தோள், முதுகு ஆகிய பகுதிகளை காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. கைகள் (arms), தோள் (shoulder), மார்பு (chest), வயிற்று தசை (abs), உடலின் மையம் (core) என மேல் உடலை வலிமையாக மாற்றும். உடலில் சமநிலையை கொண்டு வரவும், உங்களுடைய தோரணையை மாற்றவும் தண்டால் உதவுகிறது. உடலில் நெகிழ்வுத் தன்மையை கொண்டு வர தொடர்ந்து தண்டால் செய்லாம். நீங்கள் ஏதேனும் விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று வந்தால் தினமும் தண்டால் எடுப்பது உங்களின் ஆற்றலை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். குறிப்பாக இது இதய ஆரோக்கியத்திற்கு உதவும். 

இதையும் படிங்க:  rahul gandhi yatra: ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்த காங்கிரஸ் தலைவர்கள்: வைரல் வீடியோ

Tap to resize

Push-Up Goals By Age in Tamil

7 முதல் 21 வயது; 

இந்த வயதில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 35 புஷ் அப்ஸ்  தொடர்ந்து செய்ய வேண்டும். இளம் வயதில் மேல் உடலை பராமரிப்பதால் அவர்களால் கபடி, ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடும்போது வலிமையாக உணர முடியும். 

 22 முதல் 26 வயது: 

இந்த வயதில் தொடர்ச்சியாக 31 தண்டால்கள் எடுப்பது நல்லது. உங்களுடைய 20 வயதுகளின் முற்பகுதியில் தசைகளை வலுப்படுத்த தண்டால் உடற்பயிற்சி உதவுகிறது. மிலிட்டரி புஷ் அப் கூடுதல் பலன்களை அளிக்கும். இந்த வயதில் ஒருவர் 31 புஷ்ஷப்களை தொடர்ந்து செய்தால் அவருடைய உடல் வலுவாக இருக்கிறது என அர்த்தம். 

27 முதல் 31 வயது: 

இந்த வயதில் தொடர்ச்சியாக 30 தண்டால்களை எடுப்பது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதால் முடியும். உங்களுடைய தசைகள் வலுவாக இந்த பயிற்சி உதவுகிறது தொடர்ச்சியாக உடலில் செயல்பாடுகள் இருந்தால் தான் இதை செய்ய முடியும். 

Push-up variations for different age groups in tamil

32 முதல் 36 வயது: 

இந்த வயதில் குறைந்தபட்சம் 26 தண்டால்களை தொடர்ந்து செய்தால் போதுமானது. இந்த வயதில் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யாவிட்டால் தசைகள் தளர்ச்சி அடைய தொடங்கி விடும்.  உங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்த இந்த வயதில் தினமும் 26 முறை தண்டால் எடுப்பதை வழக்கப்படுத்துங்கள்.  

37 முதல் 41 வயது: 

குறைந்ததபட்சமாக 24 முறை தொடர்ச்சியான புஷ்-அப்கள் செய்தால் இந்த வயதிற்கு போதுமானது. இந்த வயதிற்கு பிறகு உடலை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க உடற்செயல்பாடு அவசியமாகிறது. நாள்தோறும் 26 தண்டால்கள் செய்வது உங்களை பல பிரச்சனைகளில் இருந்து தள்ளி வைக்கிறது. 

42 முதல் 46 வயது: 

இந்த வயதில் குறைந்தபட்சம் ஒரு நாளில் 21 தண்டால்கள் எடுப்பது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும். உங்களுடைய தசைகளை வலுப்படுத்த குறைந்தபட்சம் 20க்கு அதிகமான புஷ் அப் செய்தால் கூட போதுமானது. 

Why Push-Ups Are Important for Overall Health in tamil

47 முதல் 51 வயது: 

இந்த வயதினர் ஒரு நாளில் தொடர்ச்சியாக 16 புஷ் அப் எடுத்தால் நல்ல பலன்களை காண முடியும். உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒரு நாளில் குறைந்த பட்சம் 16 தண்டால்கள் எடுப்பதை பழக்கப்படுத்துவது எதிர்கால ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். 
 
52 முதல் 56 வயது:

ஒரு நாளில் 16 முறை தொடர்ச்சியாக புஷ் அப் செய்வது உங்களுடைய ஐம்பது வயதுகளில் தசைகளை வலுவாக வைக்க உதவுகிறது. இதனால் முதுமை காலங்களில் கூட சுறுசுறுப்பாக இருக்க முடியும்.  

60 முதல் 65 வயது;

இந்த வயதில் சாதாரணமாக 6 முதல் 16 தொடர்ச்சியான தண்டால்கள் போதுமானது. 60 வயதில் தண்டால் எடுப்பது பலரால் முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் ஆறு முதல் 16 வரை தண்டால் செய்வது நல்ல இலக்காக இருக்கும். இதனை தொடர்ந்து செய்வதால் அவர்களுக்கு பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Latest Videos

click me!