
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பலரும் பலவிதமான விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகின்றனர். ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஆபத்து என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த ஜூஸ் ரொம்பவே நல்லது. மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை பீட்ரூட் ஜூஸ் வாரி வழங்கினாலும் ஒரு சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாதாம். அது யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் காலையில் ஏன் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்? இதை தெரிஞ்சுக்கிட்டா நீங்களும் ஃபாலோ பண்ணுவீங்க..
யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்க கூடாது?
அலர்ஜி உள்ளவர்கள்
ஒரு சிலருக்கு பீட்ரூட் அலர்ஜியை ஏற்படுத்தும் அத்தகையவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அவர்களுக்கு அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் வரும். எனவே பீட்ரூட் அலர்ஜி உள்ளவர்கள் ஒருபோதும் பீட்ரூட் ஜூஸ் மற்றும் பீட்ரூட்டில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
குறைந்த ரத்த அழுத்தம்
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் ஒருபோதும் குடிக்கவே வேண்டாம். மேலும் குறைந்த ரத்த அழுத்தத்திற்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் அவர்களுக்கு தலை சுற்றல், மயக்கம் வர வாய்ப்பு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
செரிமான பிரச்சனை
பீட்ரூட் ஜூஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் குடிக்க கூடாது. இதனால் செரிமான பிரச்சனை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி எரிச்சல் கொண்ட குடல் நோய் குறி உள்ளவர்களை இது இன்னும் பாதிக்கும். ஒருவேளை நீங்கள் குடிக்க விரும்பினால் முதலில் கொஞ்சமாக குடித்து பழகுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.
சிறுநீரகப் பிரச்சனை
உங்களுக்கு சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் பீட்ரூட் ஜூஸ் ஒருபோதும் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதில் அதிக அளவு ஆக்சலேட்டுகள் இருப்பதால், பீட்ரூட் ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதனால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும். மேலும் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பீட்ரூட் ஜூஸ் நீங்கள் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கல்லீரல் பிரச்சனை
உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு உடல் அரிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பீட்ரூட் ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை குறைத்து விடும்.
இதையும் படிங்க: இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி பீட்ரூட் வேண்டாம்னு சொல்லமாட்டீங்க!