
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது சிறப்பு வாய்ந்தது. வீட்டின் எந்த திசையில் எந்தெந்த அறைகள் இருக்க வேண்டும், வீட்டில் எந்தெந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும், எதை எல்லாம் வைக்கவே கூடாது, பூஜையறை எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல குறிப்புகளை வாஸ்து சாஸ்திரம் வழங்குகிறது. அது மட்டுமின்றி காலை எழுந்ததும் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை எல்லாம் செய்யக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக காலையில் எழுந்ததும் செய்யக்கூடாதவை என்று பல விஷயங்களைக் குறிப்பிடுகிறது. ஆம், காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த விஷயங்கள் வீட்டில் தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், இதன் காரணமாக வீட்டில் உள்ள நபர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.. அதனால்தான் பெரும்பாலான பெரியவர்கள் காலை எழுந்த உடன் முதலில் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்..
லட்சுமி தேவி உள்ளங்கையில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே காலையில் நம் உள்ளங்கைகளை பார்த்தால் அன்றைய நாளில் நல்ல விஷயங்களே நடக்கும் என்பது ஐதீகம். ஆனால் நம் அன்றாட வழக்கத்தில் பல விஷயங்கள் உள்ளன. எனவே காலையில் எழுந்ததும் சிலவற்றை பார்க்கக்கூடாது. இப்போது கேள்வி என்னவென்றால், காலையில் எழுந்ததும் பார்க்கக்கூடாத 5 விஷயங்கள் எவை? இதற்கு என்ன காரணம்? இதுகுறித்து வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அக்டோபரில் சூரியன்-செவ்வாய் சஞ்சாரம் – பணம், தொழில், ஆரோக்கியத்தில் யாருக்கு நல்ல பலன் கிடைக்கும்?
காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களை பார்க்கக்கூடாது
உடைந்த கண்ணாடி:
உடைந்த கண்ணாடியைக் கூட வீட்டில் வைக்கக் கூடாது. ஒரு நபர் காலையில் அத்தகைய கண்ணாடியைப் பார்த்தால், அது அபச்குணமாக கருதப்படுகிறது. அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதை அலட்சியப்படுத்துபவர்களுக்கு மோசமான வேலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நிழல்:
காலையில் எழுந்தவுடன் நிழலைப் பார்க்கக் கூடாது. உங்களுடைய நிழலாக இருந்தாலும் சரி அலல்து வேறொருவரின் நிழலாக இருந்தாலும் சரி அதை கட்டாயம் பார்க்கக் கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் கண்களைத் திறந்தவுடன் நிழலைக் கண்டால், அது உங்களுக்கு அசுபமாக இருக்கலாம். இது மரணம், , வெறுப்பு அல்லது இருளுடன் தொடர்புடையது..
நின்றுபோன கடிகாரம்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கடிகாரம் நின்றுவிட்டாலோ அல்லது உடைந்தாலோ, அதை உங்கள் முன் வைக்காதீர்கள். இது அபசகுணமாகும். நீங்கள் காலையில் எழுந்ததும் நின்று போன கடிகாரத்தைப் பார்த்தால், அது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
உடைந்த சிலை:
உடைந்த எந்த தெய்வச் சிலையையும் வீட்டில் வைக்கக் கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். பூஜை அறையில் கூட வைக்க கூடாது. அப்படி வீட்டில் உடைந்த சிலைகளை வைத்தால் அது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒரு நபரின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
12 ராசிகளுக்கான Short and Sweet வரியில் குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024!
அழுக்கு பாத்திரங்கள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் காலையில் அழுக்கு பாத்திரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உறவுகளில் விரிசல்களை உருவாக்கி, வீட்டுச் சூழல் பதட்டமாக மாறும். இது தவிர, இது வறுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே இரவு உணவுக்குப் பிறகு பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு தூங்குவது நல்லது.