சமீப காலமாகவே பலரும் தங்களது உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். தங்கள் உடல் நலத்தை பற்றி துளியும் கூட அக்கறை கொள்ளாதவர்கள் கூட தற்போது தங்களது ஆரோக்கியத்தை முறையாக கவனித்துக் கொண்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில உணவுகளுடன் விதைகளும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. விதைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செரிமானம் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் சில விதைகள் மற்றும் பூசணி விதைகள் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருந்தபோதிலும் இந்த இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
24
சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :
நீங்கள் உணவில் நார்ச்சத்தை அதிகம் சேர்க்க விரும்பினால் சியா விதைகள் தேர்வு செய்யலாம். ஏனெனில் சியா விதைகளில் பூசணி விதைகளை விட ஐந்து மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இந்த நார்ச்சத்தானது வயிறை நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை வழங்கும். இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம். மேலும் ஆரோக்கியமான செரிமானத்திற்கும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், சியா விதைகள் பெரிதும் உதவுகிறது. கூடுதல் சியா விதைகள் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் மிகவும் நன்மை பயக்கும். சியா விதைகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக வைக்க உதவுகிறது.
34
பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :
சியா விதைகளை விட பூசணி விதைகளில் அதிக புரதம் உள்ளன. இது தசை வலிமைக்கு உதவுகிறது. அதுபோல பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், அது நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தையும் ஒழுங்குப் படுத்துகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் ஈ அலர்ஜி எதிர்ப்பு நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
பூசணி விதைகள் மற்றும் சியா விதைகள் இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆகவே இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இரண்டையும் உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படியாக சியா விதைகளில் இருந்து நார்ச்சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களையும், பூசணி விதைகளிலிருந்து மெக்னீசியம் மற்றும் புரதத்தையும் பெறலாம்.