weight loss tips in tamil
தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை எதுவென்றால் உடல் எடை அதிகரிப்பு தான். அதிகரித்த உடல் எடையை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் பிரபலமான இரண்டு பானங்கள் உள்ளன. அவை கிரீன் டீ மற்றும் இஞ்சி டீ. இவை இரண்டும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்குகின்றது.
Green Tea vs Ginger Tea in tamil
இஞ்சி டீ மற்றும் கிரீன் டீ இவை இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகிறது என்றாலும், பெரும்பாலானோர் இவை இரண்டில் எது உண்மையில் நல்லது என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள். எனவே இந்த பதிவில் உடல் எடையை குறைப்பதற்கு கிரீன் டீ அல்லது இஞ்சி டீ இவை இரண்டில் எது நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: அதென்ன 2-2-2 முறை? உடல் எடையை குறைக்க 'இப்படி' ஒரு புது வழியா?! இதோ முழுவிளக்கம்!!
green tea for weight loss
எடையை குறைப்பதற்கு கிரீன் டீயின் நன்மைகள்:
கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை எரிப்பதை எளிதாக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் சில காஃபின்கள் உங்களது ஆற்றல் அளவை பராமரிக்கவும், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கவும், உடல் எடையை விரைவாக குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: டயட், உடற்பயிற்சி வேண்டாம்; இந்த 7 விஷயங்கள் பண்ணா உடல் எடை சர்ருனு குறையும்!!
Green tea and weight loss in tamil
உடல் எடை குறைப்புக்கு கிரீன் டீ எப்போது குடிக்கலாம்?
ஒரு கப் கிரீன் டீ யை நீங்கள் உடற்பயிற்சி அல்லது உணவுக்கு முன் குடிக்கலாம். இதன் மூலம் உடலில் இருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு செரிமானம் மேம்படுத்தப்படும். அதுபோல, நீங்கள் விரும்பினால் இதனுடன் நீங்கள் தேன் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். முக்கியமாக, கிரீன் டீ யை நீங்கள் அதிகமாக குடித்தால் உங்களது தூக்கம் கெடும் மற்றும் அதில் இருக்கும் காஃபின் காரணமாக உங்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும். எனவே, ஒரு நாளைக்கு நீங்கள் 2-3 கப் வரை கிரீன் டீ குடியுங்கள்.
ginger tea for weight loss in tamil
எடையை குறைப்பதற்கு இஞ்சி டீயின் நன்மைகள்:
உடல் எடையை குறைப்பதற்கு இஞ்சி டீ ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது இயற்கையாகவே உங்களது உடலை வெப்பமாக்குகிறது இதனால் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த டீ அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Weight loss benefits of ginger tea in tamil
உடல் எடை குறைப்புக்கு இஞ்சி டீ எப்போது குடிக்கலாம்?
உடல் எடை குறைப்புக்கு இஞ்சி டீ நீங்கள் காலை அல்லது உணவுக்கு இடையில் குடிக்கலாம். அதன் சுவையை மேம்படுத்த நீங்கள் அதில் இலவங்கப்பட்டை அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக இஞ்சி டீ அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் வரை குடிக்கலாம்.