வாழைப்பழம் ஆரோக்கியம் தான்.. ஆனா அதோடு 'இந்த' உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து!!

First Published | Oct 30, 2024, 9:57 AM IST

Foods Not To Eat With Bananas : வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அவற்றுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் தெரியுமா?

Foods Not To Eat With Bananas In Tamil

வாழைப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். வாழைப்பழத்தில் நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வாழைப்பழம் முழுமையான உணவாகவும் கருதப்படுவதற்கு இதுவே காரணம். வாழைப்பழம் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது தவிர இந்த பழத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

Foods Not To Eat With Bananas In Tamil

ஆனால் வாழைப்பழத்தை சரியான முறையில் அதாவது சரியான கலவியுடன் சாப்பிட்டால் மட்டுமே அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். வாழைப்பழத்தை தவறான கலவையுடன் சாப்பிட்டால் நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். எனவே வாழைப்பழத்துடன் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  மஞ்சள் நிற பல்லை வெண்மையாக்கும் வாழைப்பழத் தோல்; ரகசியம் இதுதான்!!

Latest Videos


Foods Not To Eat With Bananas In Tamil

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் :

1. வாழைப்பழம் & சோறு 

ஒரு வாழைப்பழத்தில் 20கி கார்போஹைட்ரேட் உள்ளது. 200 கிராம் சாதம் சாப்பிடுவதைவிட 3 வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கும். ஆனால் சோறும், வாழைப்பழமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறிவிடும்.

2. வாழைப்பழம் & ஆரஞ்சு

வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால்  செரிமானம் பாதிக்கப்படும். ஆரஞ்சு வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரையை செரிமானம் செய்வதை தடுக்கிறது. முக்கியமாக வாழைப்பழத்துடன் எந்த ஒரு புளிப்பு பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.

3. வாழைப்பழம் & கொய்யா

வாழைப்பழம் மற்றும் கொய்யா இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் வாயுவை ஊக்குவிக்கிறது. இதுதவிர இவை தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

Foods Not To Eat With Bananas In Tamil

4. வாழைப்பழம் & தயிர்

வாழைப்பழத்துடன் தயிரும் பலர் சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற கலவையாகும். வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே நீங்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.

5. வாழைப்பழம் & தண்ணீர்

வாழைப்பழம் சாப்பிட்ட உடனே சிலர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி உள்ளனர். ஆனால் இது தவறு. வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்றவையும் வரலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பின் சுமார் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Foods Not To Eat With Bananas In Tamil

6. வாழைப்பழம் மற்றும் முட்டை

வாழைப்பழம் குளிர்ச்சியானது. முட்டை சூடான தன்மையுடையது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழைப்பழத்தையும் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

7. வாழைப்பழம் & அசைவம்

வாழைப்பழத்துடன் எந்த ஒரு அசைவ உணவுகளையும் மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக வாழைப்பழத்துடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.

இதையும் படிங்க:  வெறும் வயிற்றில் பாலுடன் வாழைப்பழம்... ஆயுளுக்கும் அள்ளி தரும் அற்புத பலன்கள்!!

click me!