காலங்காலமாக பிறந்த குழந்தையை தூங்க வைப்பதற்கு தொட்டில்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரங்கள் செலவழித்து எவ்வளவு மென்மையான மெத்தை வாங்கினாலும், பிறந்த குழந்தை நிம்மதியாக தூங்குவது காட்டன் சேலையில் கட்டிய தொட்டிலில் தான். ஆனால் பிறந்த உடனே குழந்தையை தொட்டிலில் தூங்க போடக்கூடாது. எனவே குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து தொட்டிலில் போடணும்? எந்த வயது வரை தொட்டில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
24
பிறந்த குழந்தையை எத்தனை நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்?
பிறந்த குழந்தையை உடனேயே தொட்டிலில் போட்டு தூங்க வைக்க வேண்டாம். குழந்தை பிறந்து சுமார் 2 முதல் 4 வாரங்கள் கழித்து தொட்டிலில் போட்டு தூங்க வைக்கலாம். அதுபோல 2-6 மாதங்கள் வரை குழந்தையை கண்டிப்பாக தொட்டிலில் போட்டு தான் தூங்க வைக்கவும். ஏனெனில் இந்த பருவத்தில் நீங்கள் அவர்களுக்கு இருக்காவிட்டாலும் அவர்கள் தொட்டிலில் நிம்மதியாக தூங்குவார்கள்.
34
எந்த வயதிலிருந்து குழந்தைக்கு தொட்டில் தேவையில்லை?
ஆறு மாதம் கழித்து குழந்தையை தொட்டிலில் தூங்க வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த மாதத்திற்கு பிறகு தான் குழந்தை கவிழு பழகும். இந்த சமயத்தில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்தால் கீழே விழ வாய்ப்பு அதிகம் உள்ளன. அதற்கு பதிலாக மெத்தையில் தூங்க வைக்கலாம்.
சில வீடுகளில் குழந்தைக்கு 3-4 வயது இருக்கும்போது கூட தொட்டியில் தான் தூங்க வைப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. ஏனெனில் நீங்கள் பக்கத்தில் இல்லாத சமயத்தில் குழந்தை தூங்கி எழும்போது கீழே விழ வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பு : குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது அவர்களது இரண்டு கால்களையும் நீட்டி சரியான பொசிஷனில் வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தையை தொட்டிலில் போட வேண்டாம்.