மருதாணி கைகளில் வைத்து குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.
3. மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும்.
4. மருதாணி இட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் எல்லாம் அது பட்டு, துணிகளில் கறை ஏற்படும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை போட்டுக் கொள்ளலாம்.
5. நீங்கள் கைகளை கழுவும் போது, கடுகு எண்ணெய்யைக் கொண்டு நீக்கலாம். இல்லையென்றால், யூகலிப்டஸ் எண்ணெய்யையும் நீங்கள் உபயோகிக்கலாம்.