Published : Nov 22, 2024, 09:51 AM ISTUpdated : Nov 22, 2024, 10:04 AM IST
Seeds For Weight Loss : நீங்கள் சுலபமாக எடையை குறைக்க விரும்பினால், உங்களது உணவில் இந்த 4 ஆரோக்கியமான விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிப்பால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? உடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லையா? ஆனால் இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியை விட வேறு சில வழிகளும் உள்ளன. குறிப்பாக உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியுடன் சரியான உணவு முறையும் அவசியம். ஆம் சரியான உணவு பழக்கம் மற்றும் லேசான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
26
Seeds For Weight Loss In Tamil
அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்கு சில ஆரோக்கியமான விதைகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவடையச் செய்யும். உடல் எடை இழப்புடன் பல உடல் உள்ள பிரச்சனைகளும் அவை சரி செய்யும். அவை என்னென்ன விதைகள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பூசணி விதையில் துத்தநாகம் அதிகமாகவே உள்ளது இது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகின்றது இது தவிர இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பூசணி விதைகள் ரொம்பவே நல்லது.
46
Seeds For Weight Loss In Tamil
ஆளி விதைகள்:
ஆளி விதைகள் ஒமேகா 3 சிறந்த ஆதாரமாகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்கவும், உடலில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இது தவிர ஆளி விதையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. அவை எடையை இழக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க ஆளி விதையை உங்களுக்கு விருப்பமான முறையில் சாப்பிடுங்கள்.
56
Seeds For Weight Loss In Tamil
சியா விதைகள்:
சியா விதையில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. அவை அனைத்தும் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், பசியை கட்டுப்படுத்தவும் மற்றும் உங்களது உடலை நீண்ட நேரம் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது..
எடையை குறைப்பதற்கு சூரியகாந்தி விதைகள் மிகவும் நன்மை பயக்கும். இது வைட்டமின் ஈ யின் சிறந்த ஆதாரமாகும். மேலும் இந்த விதை சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகின்றது. இது தவிர, இந்த விதையில் மெக்னீசியம் ஏராளமாகவே உள்ளதால், அது உங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது மற்றும் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சூரியகாந்தி விதைகள் ரொம்பவே உதவும்.