அமர்ந்தபடி செய்ற இந்த பயிற்சி 'சுகர்' ஏறாமல் தடுக்கும்!! இனி கஷ்டப்பட்டு வாக்கிங் போகாதீங்க.. சூப்பர் டிப்ஸ்

First Published | Nov 7, 2024, 7:52 AM IST

Soleus Pushup and Lower Blood Sugar : அமர்ந்த நிலையில் சர்க்கரை நோயாளிகள் செய்யக் கூடிய சோலஸ் புஷ்- அப் பயிற்சி குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம். 

Soleus Pushup and Lower Blood Sugar In Tamil

சோலஸ் புஷ்-அப்கள் (Soleus Pushup) குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்த பயிற்சி நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சர்க்கரை நோயுள்ள பலர் தினமும் நடைபயிற்சி செல்ல முடியாமல் இருக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய முடியாத பலருக்கு நடைபயிற்சி தான் மிதமான உடற்பயிற்சிக்கான பலனை அளிக்கக் கூடியது. ஆனால் நேரமின்மை, போதுமான இடவசதி இல்லாமை உள்ளிட பல காரணங்களால் நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுக்கு சோலஸ் புஷ்- அப் என்ற  பயிற்சி நன்மைகளை செய்கிறது. 

Soleus Pushup and Lower Blood Sugar In Tamil

அமர்ந்த நிலையில் சோலஸ் புஷ்- அப் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த பயிற்சி உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அதன் வாயிலாக நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

இதையும் படிங்க:  சர்க்கரை நோய்  கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி'  வாக்கிங் போனா போதும்!!

Tap to resize

Soleus Pushup and Lower Blood Sugar In Tamil

சுகர் நோயாளிகளுக்கு ஏன் நல்லது? 

உங்களுடைய சாப்பாட்டுக்கு பின்னர் அதாவது சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்து உடற்பயிற்சி செய்யும்போது இரத்த சர்க்கரையை (குளுக்கோஸ்) தசை திசுக்களில் வேகமாக நகர்த்தப்படுகிறது. அங்கே அவை கிளைகோஜனாக சேமிக்கப்படும். இதனை  விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் முன்பே கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆனால் இது நீங்கள் உண்ட உணவு மூலம் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரைகளை எடுத்துக்கொள்கிறது. இதனால் உங்களுடைய செல்கள் பாதிக்கப்படலாம். இதுவே டைப் 2 நீரிழிவு நோய் வர காரணமாகும். அதனால் எப்போதும் இரவு சாப்பிட்ட பிறகு குறுநடை போடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. அவர்கள் சோலஸ் புஷ் அப்களை செய்யலாம். 

Soleus Pushup and Lower Blood Sugar In Tamil

சோலஸ் புஷ் அப்களை செய்யும் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனை அமர்ந்தபடி செய்தாலும், நடைபயிற்சிக்கு சமமான பலன் கிடைக்கும். இந்த பயிற்சியை செய்வதால் உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை 52 சதவீதம் வரை அதிகரிக்கும். மற்ற உடற்பயிற்சிகளை விடவும்   சோலியஸ் புஷ்-அப்கள் நல்லது. இதனால் கெட்ட கொழுப்பு அளவு, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.  

இதையும் படிங்க:  நடுராத்திரியில் திடீர் பசியா? 'சர்க்கரை நோயாளிகள்' எதை சாப்பிட்டால் 'சுகர்' அதிகரிக்காது தெரியுமா?

Soleus Pushup and Lower Blood Sugar In Tamil

சோலஸ் புஷ்-அப் எப்படி செய்வது? 

முதலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கால்களை தரையில் சமமாக வைத்து கொள்ளுங்கள்.  பின்னர் உங்கள் பாதத்தின் முன்பகுதியை தரையில்  வைத்துக்கொண்டு, குதிகால்களை மட்டும் உயர்த்தவும். மீண்டும் குதிகாலை கீழே வைத்து  விடுங்கள். இது மாதிரி மீண்டும் மீண்டும் குதிகாலை மட்டும் தூக்கி தரையில் வைப்பது தான் சோலஸ் புஷ் அப் ஆகும். 

இதனை மணிக்கணக்கில் கூட சோர்வடையாமல் செய்ய முடியும். ஒரு  நிமிடத்தில் உங்களால் 50 புஷ்-அப்களை சாதாரணமாக செய்து முடிக்க முடியும். இப்படி தொடர்ந்து 4 முதல் 5 நிமிடங்களுக்கு நிறுத்தாமல் செய்ய வேண்டும். பின்னர் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தொடங்கலாம். இப்படி 10 முறை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இதனை செய்யும்போது இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  

Latest Videos

click me!