வடகொரியா
இந்தியர்கள் வாழாத நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் உண்டு. இந்த நாட்டில் இந்தியர்கள் மட்டுமின்றி, பிற நாட்டவரும் இல்லாததற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக வெளிநாட்டினர் வடகொரியாவில் குடியரினால் அந்நாட்டு அரசாங்கம் அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்நாட்டில் பொருளாதார வாய்ப்புகள் ரொம்பவே கம்மி. மேலும் இங்கு இணையம் மற்றும் தகவல் தொடர்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்தியர்கள் உட்பட்ட பிற நாட்டை சேர்ந்தவர்கள் வடகொரியாவில் குடியேற விரும்புவதில்லை.
இதுதவிர, வட கொரியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட ரொம்பவே உன்னிப்பாக கவனிக்கப்படுவதால், இந்தியர்கள் உட்பட்ட மற்ற நாட்டை சேர்ந்த மக்கள் இங்கு சுற்றுலா வருவதற்கு கூட தயங்குகிறார்கள்.