Published : Nov 06, 2024, 01:34 PM ISTUpdated : Nov 06, 2024, 01:43 PM IST
Finger Sucking Problems In Kids : உங்கள் குழந்தையிடம் இன்னும் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். இல்லையெனில், இந்த பிரச்சினைகள் வரும். அது என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே சின்ன குழந்தைகள் பலருக்கும் கை சூப்பும் பழக்கம் இருக்கும். இதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். உறங்கும்போது, நடக்கும் போது என விரும்பிய நேரங்களில் கை சூப்புவார்கள். விரல் சூப்புவதால் அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்று பல பெற்றோர்களும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.
ஆனால், மருத்துவர்களின் கூற்றுப்படி, 3 வயது வரை குழந்தைகள் கை சூப்புவது சாதாரணமானது தான். அதுவே, 5 வயதிற்குப் பிறகும் குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா?
25
Finger Sucking Problems In Kids In Tamil
ஆம், குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் அதிகமாக இருந்தால் அது அவர்களது தனிமை மற்றும் பசி உணர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பழக்கம் அவர்களது பல்வேறு பற்கள் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சொல்லப்போனால் குழந்தைகளிடம் இருக்கும் இந்த கை சூப்புபழக்கம் அவர்களை பலவித பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் அதிகமாக இருந்தால் அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
பல குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட வாயில் விரல் வைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்து அவை விழுந்து, பிறகு மீண்டும் முளைக்கும் பற்கள் ஒழுங்காக அல்லாமல், பற்கள் ஏனோ தானோ என்று தான் பற்கள் வளரும். மேலும் சிலருக்கு எத்து பல்லாகிடும். மேலும் இப்படி வளரும் பற்களில் பலம் இருக்காது.
கை சூப்பும் விரலில் ரத்த ஓட்டம் குறையும்
உங்கள் குழந்தையிடம் கை சூப்பும் பழக்கம் வளர்ந்து பிறகும் கூட இருந்தால், கை சூப்பும் அந்த விரலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் அந்த விரல் உணர்வற்று போய்விடும். இது தவிர, முக்கிய உறுப்புக்கான கை மற்றும் பிற உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும்.
45
Finger Sucking Problems In Kids In Tamil
குழந்தையின் மனநிலை பாதிக்கப்படும்
குழந்தையிடம் இருக்கும் இந்த கை சூப்பும் பழக்கம் வீட்டில் மட்டுமன்றி, பள்ளியிலும் இருந்தால் மற்ற குழந்தைகளின் கேலிக்கு ஆளாவார்கள். இதனால் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும்.
மது, சிகரெட்டுக்கு அடிமை
கை சூப்பும் பழக்கம் குழந்தையிடம் இருந்தால், அவர்கள் வளர்ந்த பிறகும் கூட வாயில் எதையாவது வைக்க வேண்டும் என்று தோன்றும். இதனால் அவர்கள் சிகரெட் பிடிப்பது, மது மற்றும் போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
1. உங்கள் குழந்தையிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஆனால் அவர்களை பாதிக்காதவாறு, அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். சிறுவயதிலேயே இந்த பழக்கத்தை நீங்கள் நிறுத்தினால், பின்னாளில் குழந்தையின் வாழ்க்கையை பாதிக்காது.
2. கை சூப்பும் பழக்கத்தை குழந்தைகள் நிறுத்துவதற்காக அவர்களை பயமுறுத்த வேண்டாம். இதனால் அவர்களது மனநலம் தான் பாதிக்கப்படும். எனவே அவர்களை சுலபமாக கையாளுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காத படி அன்பாய் அவர்களிடம் பேசி அந்தப் பழக்கத்தை நிறுத்துவது தான் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.