3. உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாற்றை நன்கு பிழிந்து கொள்ளுங்கள். அதில் சிறிதழ் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதை அழுக்கு படிந்த பைப்புகளில் பூசி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு கிளீனிங் பிரஷ் கொண்டு தேய்த்து, பின் தண்ணீரில் கழுவுங்கள்.
4. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு
கிச்சன் மற்றும் பாத்ரூம் பைப்புகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை போக்க, ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சலவைத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதை பைப்புகள் மீது தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். அனைத்து கறைகளும் நீங்கி விடும்.