உலகின் இந்த ஆடம்பர இடம் தான் நீதா அம்பானியின் ஃபேவரைட்! ஒரு நாள் தங்குவதற்கு ரூ.62 லட்சமாம்!

First Published | Nov 6, 2024, 9:17 AM IST

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தனது குடும்பத்தினருடன் அடிக்கடி செல்ல விரும்பும் இடம் ஒன்று உள்ளது. உலகின் ஆடம்பர இடமாக கருதப்படும் அங்கு தங்குவதற்கு ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் செலவாகும் தெரியுமா?

Nita Ambani

நாட்டின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். நவம்பர் 1, 1964 அன்று மும்பையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.

நீதா அம்பானி தனது நேர்த்தியான தோற்றம் மற்றும் ஸ்டைலுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். உலகின் பல இடங்களை சுற்றி பார்க்கவும் நீதா அம்பானி விரும்புகிறார். தனக்கு நேரம் கிடைக்கும் போது, ​​நாடு மற்றும் வெளிநாடுகளை சுற்றி வர விரும்புகிறார்..

Nita Ambani Favourite Place

வெளிநாட்டு பயணம் என்றாலே நீதா அம்பானியின் முதல் தேர்வாக இருப்பது சுவிஸ் ஆல்ப்ஸ் ஆகும். இந்த இடம் அல்ட்ரா ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது என்பது நம்மில் பலரும் தெரிந்திருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து பெரும்பணக்காஅரர்கள் தங்கள் விடுமுறையைக் கொண்டாட அங்கு செல்கின்றனர். 

சுவிஸ் ஆல்ப்ஸ் பல ஏரிகள், கிராமங்கள் மற்றும் ஆல்ப்ஸின் உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. அந்த வகையில் தற்போது நீதா அம்பானி தனது குடும்பத்தினருடன் ஆல்ப்ஸ் மலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள பெர்கன்ஸ்டாக் ரிசார்ட் என்ற மிக விலையுயர்ந்த ரிசார்ட்டில் அவர் தங்கியதாக கூறப்படுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த வீடு இதுதான்! முகேஷ் அம்பானியின் ஆண்டிலியாவை விட இரு மடங்கு விலை!

Tap to resize

Nita Ambani Favourite Place

பிரசிடென்ஷியல் சூட்டின் விலை ஒரு இரவுக்கு 28,000 டாலர் மற்றும் ராயல் சூட்டின் விலை ஒரு இரவுக்கு 46,000 டாலர் முதல் தொடங்குகிறது, அதாவது நீதா அம்பானி தனது சுவிஸ் ஆல்ப்ஸ் பயணத்தில் ஒரு இரவுக்கு 74,000 டாலர் செலவழித்தார்.

அதாவது இந்த ரிசார்ட்டில் ஒரு நாளுக்கான பில் தோராயமாக ரூ.62 லட்சம் ஆகும்.. அடிக்கடி இங்கு வரும் நீதா அம்பானியின் விருப்பமான ரிசார்ட்டுகளில் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது

Swiss Alps

சுவிஸ் ஆல்ப்ஸில் கவனம் ஈர்க்கும் ஏரி

சுவிஸ் ஆல்ப்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட அழகான இடங்கள் இருந்தாலும், இங்குள்ள லூசர்ன் ஏரி அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. இது சுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியின் கொள்ளை கொள்ளும் அழகு காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது..

உலகின் மிக ஆபத்தான மலை 

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் பல உயர்ந்த மலைகள் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 4,804 மீட்டர் (15,774 அடி) உயரம் கொண்ட சுவிஸ் ஆல்ப்ஸின் மிக உயரமான சிகரமான Mont Blanc மலை ஆகும். இந்த மலை உலகின் மிகவும் ஆபத்தான மலைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. இம்மலையில் ஏறுபவர் உயிருடன் திரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இங்கு பலரும் மலையேற செல்கின்றனர்.

மாலத்தீவை விட அழகான இடம்! அதுவும் கம்மி விலையில்! IRCTC-ன் பெஸ்ட் ஹனிமூன் பேக்கேஜ்!

Swiss Alps

நீங்கள் சுவிஸ் ஆல்ப்ஸ் செல்ல விரும்பினால், விமானத்தில் செல்வதே சிறந்த வழி. 99.1 கிமீ தொலைவில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். இது தவிர, மிலன் மல்பென்சா (எம்எக்ஸ்பி) விமான நிலையம், (104.3 கிமீ), மிலன் பெர்கமோ (பிஜிஒய்) விமான நிலையம் (132.6 கிமீ), மிலன் லினேட் (எல்ஐஎன்) விமான நிலையம் (134 கிமீ) மற்றும் பாசல் (பிஎஸ்எல்) விமான நிலையம் (139.5 கிமீ) ஆகியவை அடங்கும்.

Latest Videos

click me!