இனியும் அப்படி பயன்படுத்தாதீங்க! தலை துடைக்கும் 'டவலை' எத்தனை நாளுக்குள்  துவைக்க வேண்டும் தெரியுமா?

Published : Nov 06, 2024, 12:19 PM ISTUpdated : Nov 06, 2024, 01:46 PM IST

Towel Washing Frequency : நாம் பயன்படுத்தும் டவலில் தான் கிருமிகள் அதிகம் தங்கும் தெரியுமா?எனவே, அதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும் என்றும், ஒரு டவலை எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்றும் நம்மில் பலருக்கு தெரியாது. இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

PREV
15
இனியும் அப்படி பயன்படுத்தாதீங்க! தலை துடைக்கும் 'டவலை' எத்தனை நாளுக்குள்  துவைக்க வேண்டும் தெரியுமா?
How Often To Wash Towels In Tamil

பொதுவாகவே நாம் வெளியே சென்று வந்தாலே வெளியில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் காற்றில் மூலம் பரவி நம்முடைய தோலில் ஒட்டிக் கொள்ளும். இதனால் சருமத்தின் மேற்பரப்பில் பல வகையான நுண்ணுயிரிகள் தங்கிவிடும். ஆனால் அவற்றில் சில நுண்ணுயிரிகள் மட்டுமே நம்மை சரும தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், நாம் குளித்துவிட்டு டவலை பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் நீர் மற்றும் பாக்டீரியாக்கள் தூண்டில் ஒட்டிக் கொள்ளும். இதனால் டவலில் இருக்கும் ஈரப்பதம் நுண்ணுயிரிகளுக்கு உணவாகும். இதன் காரணமாக பாக்டீரியாக்கள் அதில் வளர சாதகமான சூழலை பெறுகின்றன. 

25
How Often To Wash Towels In Tamil

அத்தகைய சூழலையில், நீங்கள் துவைக்காமல் திரும்பத் திரும்ப அந்த துண்டை பயன்படுத்தினால் ,அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் தோல் மற்றும் மூக்கு வழியாக உங்கள் உடலுக்கு சென்று கடுமையான நோய்த்தொற்று மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுவும் குறிப்பாக நீங்கள் அந்த துண்டை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அல்லது மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டா,ல் அது அவர்களுக்கு. மோசமான தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:   மழை வர போது.. துண்டுகள், பெட்ஷீட்களில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சிம்பிளான 10 டிப்ஸ்!!

35
How Often To Wash Towels In Tamil

டவலை துவைக்காமல் பயன்படுத்தினால் வரும் பிரச்சினைகள்:

நீங்கள் பயன்படுத்தும் துண்டை நீண்ட நாள் துவைக்காமல் அப்படியே வைத்தால் அதில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் தங்கிவிடும். அதை நீங்கள் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் சென்று விடும். இதனால் உங்களது முகம் மற்றும் சருமத்தில் பருக்கள் வருவதற்கு காரணமாகும்.

இது தவிர முகத்தில் தடிப்புகள், கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும். அதிலும் குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அழுக்கு டவலை மீண்டும் பயன்படுத்தும் போது உங்களது தோல் பிரச்சனை இன்னும் மோசமாகும்.

45
How Often To Wash Towels In Tamil

டவலை எத்தனை முறை துவைக்க வேண்டும்?

சரும பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் பயன்படுத்தும் டவலை 2-3 முறை பிறகு கண்டிப்பாக துவைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வாரத்திற்கு ஒரு முறையாவது துவைத்து பயன்படுத்துவது தான் நல்லது என்று பரிந்துரை செய்கின்றனர். 

ஒரு டவலை ஒருவர் மட்டுமே பயன்படுத்தினால் இப்படி செய்ய வேண்டும். இல்லையெனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே டவலை பயன்படுத்தினால் அதை தினமும் துவைக்க வேண்டும். அதுபோல டவலை துவைத்து வெயிலில் நன்கு காய வைத்து பிறகு பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க: என்னங்க சொல்றீங்க.. ஒரு பாத் டவல் விலை ரூ.77 ஆயிரம்! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அதுல?

55
How Often To Wash Towels In Tamil

2-3 நாட்களுக்கு ஒரு முறை தவளை துவைப்பவர்கள் டவலை பயன்படுத்திய பிறகு தினமும் வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் அதில் இருக்கும் ஈரப்பதம் வெளியேறும் மற்றும் கிருமிகள் தங்க வாய்ப்பில்லை. இதை செய்யவில்லை என்றால், கிருமிகளால் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு தீவிர தோல் நோய்களுக்கு ஆளாகுவீர்கள்.

குறிப்பு : மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சருமத்த தொடர்பான பிரச்சனைகளிலிருந்து உங்களை நீங்களே காத்துக் கொள்ளலாம்!!

Read more Photos on
click me!

Recommended Stories