Comet: வால் நட்சத்திரம் என்றால் என்ன ..? அதன் அறிவியல் உண்மை குறித்து ஓர் சுவாரஸ்யமான பதிவு..

First Published Aug 18, 2022, 2:19 PM IST

Comet: வால் நட்சத்திரம் என்றால் என்ன ..? அது எப்படி உருவானது..?அதன் அறிவியல் உண்மை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம். 

Comet:

பண்டைய காலத்தில் வாழ்ந்துள்ள மக்கள் வால் நட்சத்திரத்தை கண்டு மிகவும், பயந்து நடுங்கியுள்ளனர். காரணம், அதன் வெளிச்சம் மற்றும் நெருப்பு பந்து ஏதோவொரு அசுப சக்தி என்ற மூட நம்பிக்கையை வளர்த்தனர். ஆனால், அறிவியல் வளர வளர பல்வேறு புதிய புதிய ஆராய்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு புதிய விஷயங்களை நமக்கு சொல்லி தந்து தான் இருக்கின்றனர். 

மேலும் படிக்க...Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன

Comet:

உண்மையில் வால் நடத்திரம் என்பது சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.  

மேலும் படிக்க...Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன

Comet:

வால்  நட்சத்திரம் எப்போது கண்டறியப்பட்டது:

சூரியனில் இருந்து சுமார் 1.49 பில்லியன் மைல்கள் (2.4 பில்லியன் கிமீ) தொலைவில் உள்ள சனி மற்றும் ராகுவின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில், வால் நட்சத்திரம் முதன்முதலில் 2017 இல் காணப்பட்டது. ​​வால் நடத்திரத்திற்கு K2 என்று பெயரிடப்பட்டது என Space.com என்ற தளத்தில் வெளியான அறிக்கை கூறுகிறது.  பொதுவாக இந்த வால் நட்சத்திரங்கள் மார்ச் மாதத்தில் தான் உருவாகியுள்ளது.

Comet:

மேலும், கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கி  K2 என்னும் வால் நட்சத்திரத்தின் உட்கரு 18 முதல் 100 மைல்கள் (30 முதல் 160 கிமீ) அகலமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தது. சூரியனின் வெப்பம் வால் நட்சத்திரத்தை மிக விரைவாக சூடுபடுத்துகிறது. இதனால் அதன் திடமான பனி நேரடியாக வாயுவாக மாறி கோமா எனப்படும் வால் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு மேகத்தை உருவாக்குகிறது. பெரும்பாலான வால்மீன்கள், கைபர் எனப்படும் பனிக்கட்டிப் பொருட்களின் கொத்துகள் கொண்ட டிரான்ஸ்-நெப்டியூனியன் ஆப்ஜெக்ட் பெல்ட்டிலிருந்து வந்தவை ஆகும். இது ஒரு பந்து போன்ற அமைப்பு ஆகும். 

மேலும் படிக்க...Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன

வால்  நட்சத்திரம் எப்போது தெரியும்..?

வானில் வடமேற்குப் பகுதியில் சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் இந்த வால் நட்சத்திரம் தெரியும். சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் 45 நிமிடங்கள் காத்திருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண வேண்டும். வெறும் கண்ணில் பார்க்கும்போது தெளிவாக தெரியாது. டெலஸ்கோப்பில் பார்க்கும்போது வால் உருவத்தில் நன்றாக தெரியும்.

Comet:

அதன் பின்னால் நீண்டுள்ள வால் போன்ற அமைப்பை பார்த்து இதனை நாம் வால் நட்சித்திரம் என்று அழைக்கிறோம். ஆனால், உண்மையில் இது வால் நட்சத்திரம் கிடையாது, சூரியனை சுற்றி வரும் தற்காலிக கோள் என்று தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் வெளிப்புறத்தில் பனி, படிகம் இருக்கும். இந்த வால் நட்சத்திரம் தனக்கு என்று ஒரு சுற்றுவட்ட பாதையை அமைத்து கொண்டு, சூரியனை சுற்றி வருகிறது.

மேலும் படிக்க...Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன

click me!