Idli
அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நெய், மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அருமை பேஸ் பேஸ் என்பார்கள். இதுவே கார சட்னி, அசைவம் சேர்த்து சாப்பிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் என்பார்கள். சிலர் தினமும் இட்லி சாப்பிடுவார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் கூட இட்லி சாப்பிடுவார்கள். இப்படி இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை இப்போது பார்க்கலாம்.
Benefits of Eating Idli Everyday
இட்லிகள் பெரும்பாலும் நாம் புளிக்க வைத்தவை. இதனால் இட்லி சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். செரிமான பிரச்சனைகள் வராது. குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கலோரிகள் ரொம்பவே குறைவு. நார்ச்சத்து நிறைந்த உணவு. அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், கொஞ்சமாக சாப்பிட்டாலும் கூட அதிகமாக சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
Idly (Idli)
இதனால், எடை இழக்கக் கூடும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நாள்தோறும் இட்லி சாப்பிடலாம். இட்லி சாப்பிடுவதால் தேவையான புரதம் கிடைக்கிறது. அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது. இட்லி உளுந்து மாவில் தயாரிக்கப்படுகிறது. அதனால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது. இரத்த சோகை பிரச்சனைக்கான வாய்ப்பும் குறைவு.
Benefits of Eating Idli Everyday
இட்லியில் கொழுப்புச் சத்து குறைவு. கெட்ட கொலஸ்ட்ராலும் கரைகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட யாரும் சாப்பிடலாம். நாள்தோறும் இட்லி சாப்பிடுவதால் வேறென்ன நன்மைகள் உண்டாகும் என்று பார்க்கலாம் வாங்க
உடல் எடை குறையும்: இட்லியில் போதுமான அளவு புரதம் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக உடல் எடை கொண்டவர்கள் கூட நாள்தோறும் இட்லி சாப்பிடலாம். இதனால், அடிக்கடி பசி எடுக்காது. உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
Benefits of Eating Idli Everyday
குடல் ஆரோக்கியம் மேம்படும்: இட்லி போன்ற புளித்த உணவு உட்கொள்வது உங்கள் உணவில் அதிக வசியமான புரோபயாடிக்குகளை சேர்க்கிறது. இது உங்கள் குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகரிக்கிறது.
எளிதில் ஜீரணிக்கக் கூடியது: இட்லி மற்றும் சாம்பார் ஆகியவை வளர்ச்சிக்கு மாற்றத்திற்கு எளிதானவை. வேக வைத்த உணவு என்பதால் எள்தில் ஜீரணமாகக் கூடியது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.