உள்ளாடைகளை முறையாக பயன்படுத்துவது ஒரு தனிப்பட்ட நபரின் சுகாதாரத்தை பொறுத்தது. நீங்கள் உள்ளாடைகளை நீண்ட நாள் அணிவதன் மூலம் உங்களது சுகாதாரத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஆகவே, மற்ற பொருட்களை போலவே உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறதா.. என்று இங்கே நாம் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உண்டா?
நிபுணர்களின் கூற்றுப்படி, உள்ளாடைகளுக்கு இதுவரை காலாவதி தேதி நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அதை நாம் எவ்வளவு காலம் பயன்படுத்துகிறோம் மற்றும் அதை துவைப்பதற்கு எந்த வகையான டிடர்ஜென்ட்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தது தான்.
இது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், ஒரு உள்ளாடையை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதில் காலவரம்பு ஏதுமில்லை. ஆனால், ஆறு மாதத்திற்கு அல்லது ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்ளாடைகளை மாற்றுவது மிகவும் நல்லது என்கிறார்.
இப்படி உள்ளாடைகளை மாற்றுவதன் மூலம் பல வகையான தொற்றுகள் வருவதை சுலபமாக தவிர்க்கலாம். ஒருவேளை நீங்கள் உள்ளாடைகளை நீண்ட நாட்கள் மாற்றாமல் பயன்படுத்தினால் ஒவ்வாமை, தோல் பிரச்சனை போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.