ஒரு வாரம் உடற்பயிற்சி செய்யலன்னா என்னாகும்? நீங்க நினைச்சு பார்க்காத மாற்றம்

Published : Jul 22, 2025, 09:05 AM IST

நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வாரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
15

உடற்பயிற்சி உடல் நலத்திற்கு நல்லது. அது மட்டுமின்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அதிக நாள் இடைவெளி விடக்கூடாது என பரிந்துரைப்பார்கள். இதற்கு சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. உடல் உடற்பயிற்சிக்கு நன்கு பழகி இருக்கும். இந்த சமயங்களில் திடீரென தொடர்ச்சியான விடுமுறை எடுத்துக் கொண்டால் மீண்டும் பயிற்சி செய்ய தொடங்கும் போது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

25

நீங்கள் தொடர்ந்து இரண்டு வாரங்கள் வரை உடற்பயிற்சி செய்யாமல் ஓய்வெடுத்தால் அதனால் ஏற்கனவே கிடைத்த உடற்பயிற்சியின் பலன்களை இழப்பதோடு, சில உளவியல் சிக்கல்களையும் சந்திக்க கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

35

நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் நாட்களில் உடனடியாக மாற்றங்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் நாளடைவில் அவை தென்பட தொடங்கும் தசைகளில் நிறை அதிகரிக்கும் உடலில் ஆங்காங்கே கொழுப்பு சதை அதிகமாகும் ஒருவேளை நீங்கள் உணவில் கட்டுப்பாடாக இல்லை என்றால் உடல் எடையும் விடுகிடுவென உயரும்.

45

ஒருவாரம் வரை இடைவெளி விட்டு பின்னர் ஏற்கனவே நீங்கள் பழகி இருந்த பயிற்சிகளை செய்தால் கூட சிரமமாக தெரியும். கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு உள்ளாக 30 சதவீதம் வரை உங்களுடைய தாங்கும் திறனும் வேகமும் குறையலாம். வாரக்கணக்கில் இல்லாமல் வருட கணக்கில் நீங்கள் ஜிம் செல்வதை தவிர்த்து எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால் முற்றிலுமாக உங்களுடைய உடல்வாகு மாறலாம் எலும்புகளின் அடர்த்தி தசை நிறைவுத்தன்மை என ஒட்டுமொத்த உடல் அமைப்புமே மாறிவிடும்.

55

உடற்பயிற்சி உங்களுடைய மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ஆக்சிஜனை பம்ப் செய்யவும் உதவுகிறதால் உடற்பயிற்சிக்கு பின் உங்களுடைய படைப்பாற்றல் அதிகமாவதை உணரலாம். சில வாரங்கள் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் மந்தமாக உணர்வீர்கள். உங்களுடைய தூக்கத்தின் தரமும் பாதிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories