Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன..? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்கோ..

First Published Aug 12, 2022, 6:01 AM IST

Vitamin D: வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும், அதன் அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

இன்றைய துரித உணவு பழக்கவழக்கங்கள் நம் உடலில் சோர்வையும், சோம்பலையும் அதிகப்படுத்துகிறது. உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும். இது போன்ற சூழ்நிலையில், வைட்டமின்கள் குறைபாடு பொதுவானதாகி விட்டது. உடலில் மக்னீசியம், கால்சியம், பாஸ்பேட் போன்றவற்றை தக்க வைத்து கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு உள்ள ஒருவருக்கு எலும்புகளை பலவீனமாக்கி, மன அழுத்தம், முடி உதிர்வு, தசை பலவீனம் மற்றும் சோம்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

 மேலும் படிக்க ....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

எனவே, சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் டி, நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  வைட்டமின் டி குறைபாட்டால் ரிக்கெட்ஸ், ஆர்த்திரிடியஸ் போன்ற உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். 

vitamin d

முடி உதிர்தல்:

வைட்டமின் டி முடியின் வேர்க்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதன் குறைபாட்டால், முடி உதிர்தல் பிரச்சனை மிகவும் அதிகரிக்கிறது, அத்தகைய பிரச்சனை இருப்பவர்கள், வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

vitamin d

கால்சியம் பற்றாக்குறை:
 
வைட்டமின் டி குறைபாடு காரணமாக கால்சியம் பற்றாக்குறை, மூட்டுவலி, தசைவலி போன்றவை ஏற்படும். இதன் காரணமாக உடல் மற்றும் எலும்புகளில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது.

vitamin d

உடலில் சோர்வு:

நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்கள், உடலில் சோர்வு குறையவில்லை என்றால், இது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

vitamin d

செரிமான பிரச்சனை:

உடலில் செரிமான பிரச்சனை இருந்தால், து வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.உடலில் அடிபட்டு காயங்கள் மறைய தாமதமாக இருந்தால், அதுவும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

 மேலும் படிக்க ....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

vitamin d

வைட்டமின் டி உள்ள உணவுகள்:

பால், முட்டை, மீன், ஓட்ஸ், ஆரஞ்சு சூரை மீன்கள், மீன் கல்லீரல் எண்ணெய்கள், பாலாடைக்கட்டி மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள் ஆகும்.  இது உங்கள் தினசரி வைட்டமின் டி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடும்.

 மேலும் படிக்க ....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

click me!