Rahu ketu peyarchi 2022
ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகு ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதோ அல்லது வேறு எந்த கிரகத்துடன் இணையும்போது, சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது.முன்னதாக, செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் இணையும் போது அங்காரக யோகம் உருவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட ராசிகள் அசுப பலன்களை அனுபவித்து வந்தார்கள்.
இதையடுத்து, செவ்வாய் பகவான், ரிஷப ராசியில் நேற்று இடமாற்றம் அடைந்துள்ளார். செவ்வாய் ரிஷப ராசியில் பிரவேசித்தவுடன் அங்கார தோஷம் முடிவுக்கு வரவுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) முதல் அங்காரக் யோகத்தில் இருந்து விடுபடும் ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கிறது. இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க..Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?
Rahu ketu peyarchi 2022
ரிஷபம்:
ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 12ம் வீட்டில் அங்காரக தோஷம் உருவாகி இருந்தது. இது, நஷ்டம் மற்றும் செலவுகளை அதிகரித்தது. வியாபாரம் பெருகும். இந்த நேரத்தில் ஏற்படும் புதிய வணிக உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் மரகதம் அணிவது நன்மை தரும். இனிமேல், அந்த தோஷம் முடிவுக்கு வநது நிம்மதியும் நிவாரணமும் கிடைக்கும். இனிமேல், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
Rahu ketu peyarchi 2022
சிம்மம்:
ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் அங்காரக தோஷம் முடிவடைந்து, உங்களுக்கு இப்போது அதிர்ஷ்ட பாக்கியம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகன்று வேகம் அதிகரிக்கும். வணிக ரீதியிலான ஒரு பயணத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு பண வரத்து இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.