Suriyan Peyarchi 2022
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் ராசி மாற்றம், மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, ஆரோக்கியம் ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார். அதன்படி, 11 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். இதையடுத்து, ஒரு மாதம் இங்கேயே தங்கி இருப்பார். எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, புதன் கிரகம் ஏற்கனவே சிம்ம ராசியில் தங்கி இருக்கிறார். இந்த கிரகங்களின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி பலன் கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க...Sevvai peyarchi: இன்று ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி என்ன
Suriyan Peyarchi 2022
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் உண்டாகும். எனவே இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் அமைதியான மனதுடன், சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.