சாம்பிராணிப் புகை என்பது நுண் கிருமிகளை அழிக்க வல்லது. குறிப்பாக மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.
பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. வெள்ளைக் குங்கிலிய மரப் பட்டையைக் கீறி, அதன் கோந்தைச் சேகரித்து, அதில் இருந்து உருவாக்கப்படுகிறது சாம்பிராணி.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்:
குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் குணப்படுத்தவும் சாம்பிராணி ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சில விதமான வாத நோய்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது.
விந்தணு தரத்தை மேம்படுத்த:
இது ஆண்களுக்கான ஒரு சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது. ஆண்களில் பாலியல் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் நீட்டிக்கவும் சாம்பிராணி பயன்படுகிறது.
ஆண் விந்தணு தரத்தை மேம்படுத்தவும், பாலியல் தூண்டுதலை அதிகரிக்கவும் பாலுடன் கலந்து சாம்பிராணித் தூளை குடிப்பது நல்ல பயன் தரும். சாம்பிராணி இறுதியில் மோக்ஷத்தை தரவல்லது.இதனை நீங்கள் டானிக் போலவும் சாப்பிடலாம்.
வெள்ளைக் குங்கிலியக் கோந்தைப் பொடி செய்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டு வலி குணமாகும். அதேபோல், சாம்பிராணியை நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர்விட்டு நன்றாகக் குழைத்து பெண்கள் உண்டால், வெள்ளைப்படுதல் நிற்கும்.
வெள்ளைக் குங்கிலியத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணியை 1 கிராம் எடுத்து 1 கோப்பைப் பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச்சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.