Health Alert: நீங்கள் வாங்கும் முட்டை புதியதா..? இல்லை பழையதா..? அடையாளம் கண்டு கொள்வது எப்படி..?

First Published Sep 10, 2022, 11:37 AM IST

Health Alert: இனிமேல் நீங்கள் முட்டை வாங்கும் போது, அதன் வேறுபாட்டை நீங்கள் அடையாளம் காணக்கூடிய சில எளிமையான வழிகள் உள்ளன.

ஏழைகளின் அசைவ உணவுகளில் ஒன்று முட்டை..இதன் சுவையும் அதிகம், விலையும் குறைவு என்பதால் மக்கள் இதனை விரும்பி உண்ணுகிறார்கள். ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில், உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

egg

ஒரு முட்டையில், சிறந்த புரதச்சத்து சுமார் ஆறு கிராம் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. 

ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். அதேபோன்று, சுகர், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள் ஆகும்.  எனவே, இப்படி நாம் விரும்பி உண்ண கூடிய முட்டை  பிரெஷ்ஷானவை தானா என அறிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க...Budhan peyarchi2022: இன்று புதன் சஞ்சாரம்...இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாய் மாறும், உங்கள் ராசி என்ன?

ஏன் என்றால், தற்போது சந்தையில் கலப்படம் மற்றும் போலி அல்லது பழைய முட்டைகளும் சந்தையில் கிடைக்கின்றன. இதனால், பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்.எனவே, இனிமேல் நீங்கள் முட்டை வாங்கும் போது, அதன் வேறுபாட்டை நீங்கள் அடையாளம் காணக்கூடிய சில எளிமையான வழிகள் உள்ளன.

eggs yolk

காலாவதி தேதி சரிபார்க்கவும்:
 
உடலுக்கு எவ்வளவு தான் ஆரோக்கியம் தர கூடிய பொருட்களாக இருந்தாலும், எல்லா பொருளுக்கும் காலாவதி தேதி உள்ளது. காலாவதியான பிறகு அதைப் பயன்படுத்துவது சரியல்ல. இதனால் நன்மைகள் கிடைக்காததோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். 

மேலும் படிக்க...Budhan peyarchi2022: இன்று புதன் சஞ்சாரம்...இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாய் மாறும், உங்கள் ராசி என்ன?

நாம் அவசர அவசரமாக சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும் போது,  காலாவதி தேதியை பார்க்க மறந்து போய் விடுகிறோம். எனவே இனிமேல் அவற்றை வாங்கும் போது அதன் தேதியை சரிபார்க்கவும்.  மேலும், இந்த முட்டைகளை எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 
 

ஓடுகளை கவனமாக சோதிக்கவும்:

இன்று முட்டை தொழிலில் லாபம் பார்க்க விற்பனையாளர்கள் முட்டையில் வண்ணம் பூசுகிறார்கள்.  ஆனால் புதிய அல்லது பழைய முட்டையை ஒருவர் கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்க முடியும். முட்டையின் ஓட்டை கூர்ந்து பார்த்து அது வெடிக்கவில்லை என்பதையும், அதன் ஓடுகள் உதிர்ந்து விடாமல் இருக்கிறதா என்பதையும் கவனமாக சோதித்து பார்க்க வேண்டும். 

வாசனையின் மூலம் சோதனை

சந்தையில் கிடைக்கும் முட்டைகள் புதியதா இல்லையா என்பதை வாசனையின் மூலமும் கண்டறிய முடியும். முதலில் ஒரு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் பிறகு அதன் வாசனை பார்க்கவும். அழுகல் நாற்றம் வீசினால், அதை சாப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...Budhan peyarchi2022: இன்று புதன் சஞ்சாரம்...இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாய் மாறும், உங்கள் ராசி என்ன?

click me!