பொதுவாக தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் பொழுது, அதன் மூலம் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுமா? இல்லையா? அல்லது தள்ளிப் போக வாய்ப்புகள் உண்டா? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதைத் தான் நம் முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வந்தனர்.
ஏனெனில், தேங்காயை கடவுளுக்கு சமர்பிப்பதால் பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேங்காய் பிரசாதம் கொடுத்தால்தான் கடவுள் தரிசனம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.