Vastu tips
எனவே, இவற்றில் இருந்து நாம் விடுபட அடமானம் வைத்த நகை திரும்ப வரவும், வீட்டில் இருக்கும் தங்கம் மேலும் பெருகவும், இந்த ஒரு பொருளை மட்டும் தினந்தோறும் அதிக அளவு உபயோகித்து வந்தால் போதும் தங்கம் நம் வீடு தேடி வந்துவிடும். அதற்கு நாம் முதலில், பூஜைக்கு பயன்படுத்தும் சந்தன கட்டை வாங்கி கொள்ள வேண்டும். பவுடர் சந்தனங்களை விட சந்தன கட்டை சிறந்தது. இந்த பரிகாரத்திற்கு நிச்சயமாக சந்தன கட்டை தான் பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சந்தன கட்டை கிடைக்கும். அதையே வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Vastu tips
அதற்கு முதலில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தன கட்டை வாங்கி கொள்ளுங்கள். அதனை எப்போதும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், வீட்டில் நிறைவான ஐஸ்வரியம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். வீட்டில் எப்போதும் நிறைவான லட்சுமி கடாட்சம் இருக்கும். பிறகு இந்த சந்தனத்தை பன்னீர் தெளித்து இழைத்து உங்கள் சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் போது மஞ்சளுக்கு பதிலாக இதையே உபயோகப்படுத்தி வாருங்கள்.
Vastu tips
இந்த சந்தன கட்டை பூஜை அறையில் தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது, இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும், அதே போல் நகை வைக்கும் பீரோவில், நகையில் படும் படியாகவும் சிறு சிறு சந்தன சக்கையை வைத்து விடுங்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் கல்லாப்பெட்டி வைக்கும் இடத்தில் பன்னீருடன் சந்தனம் சேர்த்து பொட்டு வைத்து, அதிலும் ஒரு சிறியத்துண்டு சந்தனத்தை வைத்து விடுங்கள்.