Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

Published : Jul 30, 2026, 04:42 PM IST

Western Toilet Vs Indian Toilet: இந்தியன் டாய்லெட் மற்றும் வெஸ்டர்ன் டாய்லெட் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள மருத்துவ ரீதியான வித்தியாசங்கள், நன்மைகள், தீமைகளை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Western Toilet Vs Indian Toilet

இந்திய வீடுகள் பலவற்றிலும் தற்போது மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட்களையே பயன்படுத்துகின்றனர். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பிற வீட்டிற்குச் செல்லும் பொழுது வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கும் வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சிலர் வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவதில் தீமைகள் இருப்பதாகவும், இந்தியன் டாய்லெட்டே சிறந்தது என்றும் வாதிடுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

25
இந்தியன் டாய்லெட்

இந்தியன் வகை டாய்லெட்டில் அமரும் பொழுது உடல் 35 டிகிரி கோணத்தில் இருக்கும். இதன் காரணமாக குடலின் கீழ் பகுதி நேராகி மலக்குடல் பாதை தடையின்றி திறக்கும். இதனால் மலக்கழிவுகள் எளிதில் வெளியேறும். இந்த சரியான முறையால் மலச்சிக்கல், மூலநோய் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. உடலின் எந்தப் பகுதியும் டாய்லெட் சீட்டின் மேல் நேரடியாக படாததால் கிருமித் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு. மேலும் தொடை மற்றும் இடுப்பு தசைகளுக்கு இது இயற்கையான பலத்தையும் தருகிறது. இதில் இருக்கும் தீமைகள் மூட்டு வலி, முழங்கால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முதியவர்களால் அமர முடியாது.

இதையும் படியுங்கள் - Facts: மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

35
வெஸ்டர்ன் டாய்லெட்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாற்காலியில் அமர்வது போல 90 டிகிரி கோணத்தில் அமர்கிறோம். வயதானவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இது மிகவும் சௌகரியமானது. கால்களுக்கு அழுத்தம் தராது. தவறி விழும் அபாயமும் குறைவு. ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் தீமைகள் அதிகம். 90 டிகிரி அமர்வு கோணத்தால் குடல் பாதைகள் முழுமையாக திறப்பதில்லை. குடல் மடங்கிய நிலையிலேயே இருக்கும். இதனால் கழிவை வெளியேற்ற அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். சீட்டின் மீது உடல் நேரடியாகப்படுவதால் சரியாக பராமரிக்கப்படாத பொதுக் கழிப்பறைகளில் கிருமி தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் - Egg Formation: கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

45
மருத்துவர்கள் சொல்வது என்ன?

குடல் மருத்துவர்கள், உடலின் இயற்கையான கழிவு நீக்கம் முறைக்கு இந்தியன் டாய்லெட்டை சிறந்ததாக கருதுகின்றனர். எலும்பு சிகிச்சை மருத்துவர்கள், முதியவர்கள், உடன் பருமன் உள்ளவர்கள், முழங்கால் தேய்மானம் உள்ளவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட்டையை பரிந்துரைக்கின்றனர். இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினை உள்ளவர்கள் இந்தியன் டாய்லெட்டில் அதிக நேரம் குனிந்து அமரும் பொழுது ரத்த அழுத்தம் திடீரென உயர வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டை பரிந்துரைக்கின்றனர்.

இதையும் படியுங்கள் - Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

55
எது சிறந்தது?

வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் மட்டுமே பயன்படுத்துபவர்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிய வழி உள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமரும் பொழுது கால்களின் கீழே ஒரு சிறிய மர ஸ்டூல் அல்லது பிளாஸ்டிக் ஸ்டூலை வைத்துக் கொள்ளுங்கள். கால்களை சற்று மேலே உயர்த்தும் பொழுது உடல் இயல்பாக 35 டிகிரி நிலைக்கு வந்து கழிவு நீக்கம் எளிதாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கு இந்தியன் டாய்லெட்டும், முதியவர்கள் கர்ப்பிணிகள், மூட்டு வலி, இதயக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட்டும் பாதுகாப்பானது் சாத்தியப்பட்டால் வீட்டில் இரண்டு வகையான டாய்லெட்டுகளையும் அமைப்பதே சிறந்த தீர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories