பெற்றோர்களே.. உங்க டீன் ஏஜ் மகனிடம் நெருக்கமாக பழக சூப்பர் டிப்ஸ் இதோ!!

First Published | Oct 15, 2024, 1:16 PM IST

Parenting Tips : உங்கள் டீனேஜ் மகனிடம் நல்ல நெருக்கமாக பழக விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.

Ways to Strengthen Your Bond with Your Teenage Son In Tamil

நாம் வாழ்ந்த வாழ்க்கையிலேயே ரொம்பவே ஜாலியான வாழ்க்கை எதுவென்றால் அது டீன் ஏஜ் வாழ்க்கை தான் என்று பலரும் சொல்லுவார்கள். ஏனெனில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று நிறைந்து இருக்கும். இந்த பருவத்தில் தான் உடல் மற்றும் மனதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். 

மேலும் இந்த வயதில்தான் குழந்தைகளிடம் தெளிவான மனநிலை இருக்காது. எனவே பெற்றோர்களின் பங்கு இதற்கு மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பது மட்டுமின்றி, நல்ல தோழனாகவும் அவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்ல வேண்டும். 

அந்த வகையில் உங்கள் டீனேஜ் மகனுடன் பழகுவது உங்களுக்கு சவாலாக இருந்தால், அவனுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Ways to Strengthen Your Bond with Your Teenage Son In Tamil

3. ஊக்கப்படுத்துங்கள்

உங்களது மகன் விளையாட்டு இசை என எதில் ஆர்வமாக இருந்தாலும், அதில் சிறப்பாக வர அவனை ஊக்குவியுங்கள். உங்களால் முடிந்தவரை அவனது விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவனை இன்னும் ஊக்கப்படுத்துங்கள். 

4. நேரத்தை ஒதுக்குங்கள்

நீங்கள் உங்கள் டீனேஜ் மகனிடம் நெருக்கமாக பழக கண்டிப்பாக நேரத்தை ஒதுக்குங்கள். இதற்கு நீங்கள் இருவரும் ஒன்றாக உணவு சாப்பிடலாம், தியேட்டர் போகலாம், நடைபயிற்சி செல்லலாம் போன்ற விஷயங்களில் ஒன்றாக நேரத்தை செலவிட்டால் உங்களது பிணைப்பு பலப்படும்.

இதையும் படிங்க: உங்க மகளுக்கு 10 வயசு ஆச்சா? அப்ப இந்த '6' விஷயங்களை கண்டிப்பா சொல்லி கொடுங்க!

Tap to resize

Ways to Strengthen Your Bond with Your Teenage Son In Tamil

5. முன்மாதிரியாக இருக்கவும்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் நேர்மை, மரியாதை, கருணை போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம், அதை பார்த்து உங்களது மகனும் பின்பற்றுவான். எனவே எப்போதும் நீங்கள் உங்கள் மகனுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

6. பாராட்டுங்கள்

உங்கள் மகன் செய்யும் ஒவ்வொரு முயற்சிகள் மற்றும் சாதனைகளை பாராட்ட மறக்காதீர்கள். மேலும் சில சமயங்களில் ஆக்கபூர்வமான கருத்துகளையும் அவனிடம் சொல்லுங்கள். ஆனால் ஒருபோதும் விமர்சிக்காதீர்கள்.

இதையும் படிங்க:  உங்க குழந்தை பொது இடத்தில் அழுகிறதா? கத்துகிறதா? 'இந்த' ட்ரிக் ட்ரை பண்ணுங்க!

Ways to Strengthen Your Bond with Your Teenage Son In Tamil

7. பொறுமை அவசியம்

டீன் ஏஜ் மகனை கையாளுவதில் பொறுமை மிகவும் அவசியம் ஏனெனில், இந்த வயதில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான உறவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எந்த மாதிரியான சவால்களைய சந்திக்க அமைதியாகவும், அவர்களுக்கு ஆதரவாகவும் எப்போதும் இருங்கள்.

8. ஆரோக்கியமான பழக்கத்தில் ஊக்கப்படுத்தவும்

ஆரோக்கியமான உணவு பழக்கம் தினமும் உடற்பயிற்சி நல்ல தூக்கம் ஆகியவற்றில் உங்கள் மகனை ஊக்கப்படுத்துங்கள். மேலும் நீங்களும் இந்த விஷயங்களில் உங்கள் மகனுடன் இணைந்து இருங்கள்.

Latest Videos

click me!