
இன்றைய காலத்தில் எல்லாருடைய வீடுகளிலும் கண்டிப்பாக பிரிட்ஜ் இருக்கும். பிரிட்ஜ் வைத்திருக்கும் பலருக்கும் அதை பராமரிப்பது எப்படி என்று தெரிவதில்லை. அதுவும் குறிப்பாக ஃப்ரீசரை பராமரிப்பது குறித்து பெரிதளவில் யாருக்கும் புரிதல் இல்லை. இதனால் ஃப்ரீசருக்குள் சுருக்கும் நீர் முறையானது சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் உறைபனியாக மாறிவிடுகிறது. இதை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பிரீசர் கதவை மூடுவதும், திறப்பதும் பிரச்சினையாகிவிடும்.
ஃப்ரீசரை நீங்கள் முறையாக பராமரிக்காவிட்டால், அதனால் பிரிட்ஜின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிக்கப்படும். எனவே அதை தடுப்பதற்கு ஃப்ரிட்ஜுடன் ஃப்ரீசர் உடன் முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே, ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் சேர்வதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரிட்ஜில் ஐஸ் கட்டி உருவாவதற்கான காரணங்கள்:
1. ஃப்ரிட்ஜின் கதவு அல்லது கேஸ்கெட் பழுதடைந்து இருந்தால் ஃப்ரீசரில் ஐஸ் கட்டி உருவாகும். எப்படியெனில் இவை பாதிக்கப்பட்டால் காற்றானது உள்ளே சென்று சுற்றிக் கொண்டிருக்கும். எனவே ஃப்ரிட்ஜின் கதவு, கேஸ்கெட் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை மாற்றி விடுங்கள்.
2. அதுபோல ஃப்ரிட்ஜில் நீரை ஆவியாக்கும் காயில் சேதமடைந்து இருந்தாலும் பிரீசரில் ஐஸ் கட்டி உருவாகும். இந்த காயில் தான் ஃப்ரிட்ஜில் தண்ணீர் தேக்கம் அதிகமாக இருந்தால் அதை வெளியேற்றி விடும். எனவே இந்த காயிலை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால் ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டி உருவாகாது.
3. ஃப்ரிட்ஜில் தண்ணீரை சுத்திகரிக்கும் வாட்டர் பில்டர் பழுதடைந்து இருந்தாலும் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் உருவாகிவிடும். எனவே வாட்டர் பில்டர் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை மாற்றி விடுங்கள்.
ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் உருவாவதை தடுக்க வழிகள்:
முதல் வழி...
முதலில் பிரிட்ஜின் சுவிட்சை அணைத்து விடுங்கள். பிறகு பிரிட்ஜை தண்ணீர் கசிவு ஏற்படாத இடத்திற்கு மாற்றி விடுங்கள். இப்போது ஒரு வழியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கப் கொண்டு தண்ணீரை ஃப்ரீசரில் ஊற்றவும். கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ் கட்டிகள் அனைத்தும் உருகும்.
இரண்டாவது வழி...
இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீரை நிரப்பி அதை ஃப்ரீசரில் வைத்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். ஃப்ரீசரின் கதவை மூடிவிடுங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் ஐஸ்கட்டிகள் அனைத்தும் உருகி இருக்கும்.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜில் முட்டை வைத்தால் கெட்டு போகாதுனு நினைச்சிருப்பீங்க.. அதுக்கு இப்படி ஒரு காரணம் கூட இருக்கு!!
மூன்றாவது வழி...
உங்கள் வீட்டில் ஹேர் டிரையர் இருந்தால் ஃப்ரீசரில் கட்டியிருக்கும் ஐஸ்களை சுலபமாக உருகிவிடலாம். இதற்கு முதலில் ஃப்ரீஷரின் கதவை திறந்து ஹேர் டிரையரை ஆன் செய்யவும். அதை அதிக வெப்பத்திற்கு பயன்படுத்துங்கள். சூடான காற்றுப்பட்டு ஐஸ் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கும்.
நினைவில் கொள்:
ஃப்ரீசரில் ஐஸ் கட்டி இருப்பதை உடைக்க எஃகு அல்லது உலக கரண்டியை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு மரக் கரண்டியை பயன்படுத்தலாம். மேலும் ஃப்ரீசரில் அடிக்கடி இந்த பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டால் அதை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.
இதையும் படிங்க: ஃப்ரிட்ஜில் வைக்கும் காய்கறிகள், பழங்கள் சீக்கிரமே அழுகாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!