பூண்டு சீக்கிரம் முளைவிடாம ரொம்ப காலம் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்!!

First Published | Jan 17, 2025, 12:21 PM IST

Garlic Storage Tips : பூண்டு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் பிரெஷ்ஷாவை வைப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Garlic Storage Tips in Tamil

பூண்டு சமையலறையில் இருக்கும் ஒரு முக்கியமான சமையல் பொருள். பூண்டு அசைவம் சைவம் என இரண்டிலுமே பயன்படுத்தப்படும். பூண்டு உணவில் சுவையை வழங்குவது மட்டுமின்றி, அதில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, பூண்டு தினமும் சமையலுக்கு பயன்படுவதால் பலருக்கு அதை அளவுக்கு அதிகமாக வாங்கி வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அது வெப்பம் அல்லது பிற காரணங்களால் சீக்கிரமே அழுகிப்போய்விடும் அல்லது காய்ந்து விடும். மேலும் பூண்டை தவறான முறையில் சேமித்தாலும் அது  கெட்டுப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பூண்டு கெட்டுப் போகாமல் நீண்ட நாள் சேமிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Garlic Storage Tips in Tamil

காற்று போகாத ஜாடியில் வைக்கவும்:

பூண்டை நீண்ட நாள் சேமிக்க அதன் தோலை உரித்து காற்றுப்புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு, அதை ஃப்ரிட்ஜ் வைத்து சேமிக்க வேண்டும். இப்படி நீங்கள் சேமித்தால் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். முக்கியமாக, ஜாடி ஈரமாக இருக்கக் கூடாது. நன்கு உலர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் ஜாடி ஈரமாக இருந்தால் பூண்டு வழக்கத்தை விட சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். 

இதையும் படிங்க:  முளைவிட்ட பூண்டை சாப்பிடலாமா? பூண்டு ஏன் முளைக்குது தெரியுமா?

Tap to resize

Garlic Storage Tips in Tamil

சணல் பையில் வைக்கலாம்:

நீங்கள் மார்க்கெட்டில் பார்த்திருப்பீர்கள், பூண்டு சணல் பையில் வைத்திருப்பதை. ஏனெனில் பூண்டை இப்படி சேமித்தால் கெட்டுப் போகாமால், நீண்ட நாள் பிரஷ்ஷாகவே இருக்கும். எனவே நீங்களும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பூண்டை சணல் பையில் வைத்து சேமித்தால் நீண்ட நாள் பயன்படுத்தலாம். பூண்டை சணல் பையில் வைத்தால், அதில் காற்றோட்டமாக இருப்பதால் பூண்டு நீண்ட நாள் பிரஷ் ஆகவே இருக்கும் கெட்டுப் போகாது. இந்த முறையில் நீங்கள் பூண்டை சேமித்தால் வரும் வாரம் வரை பயன்படுத்தலாம். 

காட்டன் துணி:

ஒருவேளை உங்கள் வீட்டில் சணல் பை இல்லை என்றால், காட்டில் துணியில் வைத்து கூட பூண்டை சேமிக்கலாம். இதற்கு காட்டன் துணியில் இரண்டாக மடித்து, அதில் பூண்டை வைத்து மூட்டை போல் கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அந்த மூட்டையை குறைந்த வெளிச்சமுள்ள இடத்தில் வைக்கவும். முக்கியமாக அந்த பகுதியைச் சுற்றி குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Garlic Storage Tips in Tamil

கிச்சனில் சேமிப்பது எப்படி?

பூண்டு சமையலறையில் வைத்து சேமிக்க பூண்டை கூடையில் வைத்து, அதை ஒரு காற்றோட்டத்துடன் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக பூண்டை கூடையில் சேமிக்கும் போது அது முழு பூண்டாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவை சீக்கிரமே கெட்டுவிடும்.

இப்படியும் சேமிக்கலாம்:

நீங்கள் சமையலுக்கு தினமும் பூண்டு பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை பேஸ்டாக அரைத்து, ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கூட சேமிக்கலாம். முக்கியமாக பூண்டை ஜாடியில் வைக்கும் முன் அதில் சிறிதளவு வினிகர் சேர்த்தால், பூண்டு நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  பூண்டில் மருத்துவ குணம் இருந்தாலும் இந்த '7' பேர்  சாப்பிடக் கூடாது!! மீறினால் என்னாகும் தெரியுமா?

Latest Videos

click me!