சாதத்துடன் - காய் கறிகள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாதம் சாப்பிட கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது. ஆனால் சாதம் உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக கூட, எடையை குறைக்க முடியும். கால் பங்கு வெள்ளை சாதம் எடுத்து கொண்டு, அதில் முக்கால் வாசி காய்கறிகள் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்.
பொடிப்பொடியாக வெட்டிய கேரட், கேப்சிகம், முட்டை கோஸ் போன்ற பல காய்கறிகளை கடாயில் சிறிதளவு என்னை, உப்பு, மற்றும் மிளகு பொடி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தால் அதில் ஸ்பைசியான சில மசாலா பொருட்களை கூட சேர்த்து கொள்ளலாம். இந்த காய்கறிகள் கலவையுடன் சாதத்தை மிக்ஸ் செய்து சாப்பிடும் போது, அதிக அளவில் உணவு எடுத்து கொண்ட பீல் கிடைக்கும். கொழுப்பை கூடுவது தவிர்க்கப்படும்.