
இன்றைய காலகட்டத்தில் பலரும் தொங்கும் தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் தான். உடல் எடை அதிகரிப்பால் தன்னம்பிக்கை குறைவது மட்டுமின்றி, உடலில் பலவித நோய்களையும் ஏற்படுத்தும். இது தவிர, தொங்கும் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். எனவே, தொப்பை மற்றும் எடையை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதாவது தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவது என சில எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கிறார்கள். இன்னும் சிலரோ ஜிம்மிற்கு சென்று எடையை குறைக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். நாளின் ஆரம்பம் ரொம்பவே முக்கியமானது என்பதால், ஆரோக்கியமான உணவுடன் நாளை தொடங்குவது ரொம்பவே நல்லது. எனவே புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்கள். இவை நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைப்பது மட்டுமின்றி, தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும், செரிமான அமைப்பு மேம்படும் மற்றும் பகல் நேரத்தில் கலோரிகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தும். இப்போது தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பழங்கள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில் இவை உடலில் கலோரிகள் அளவை அதிகரிக்கச் செய்யாது. ஆனால், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வாரி வழங்கும். எனவே ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுங்கள். அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாகவே உள்ளன. எனவே காலை உணவாக இதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும், எடையும் வேகமாக குறையும்.
முளைகட்டிய பயிர்கள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முளைகட்டிய பயிர் வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. ஆனால் இதனுடன்வெங்காயம், தக்காளி மற்றும் பிற மாசலா பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதனால் வயிறு நிரம்பி இருக்கும். எடையும் அதிகரிக்காது.
முட்டை:
பலரும் காலை உணவாக அதிகம் விரும்பி சாப்பிடுவது முட்டைதான். பல விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய தசைகளை உருவாக்கும். காலை உணவாக முட்டை சாப்பிட்டு வந்தால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை நமக்கு வழங்கும்.
ஓட்ஸ்:
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு காலை உணவில் ஓட்ஸ் சிறந்த தேர்வாகும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே காலை உணவாக இதை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் வயிற்றுக் கொழுப்பு மற்றும் இடையே சுலபமாக குறைத்து விடலாம்.
நட்ஸ்கள்:
பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ்களை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பூசணி விதை, சியா விதை, ஆளி விதை போன்ற விதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நட்ஸ்கள் மற்றும் விதைகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இவற்றை காலை வேலையில் சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் தேவையற்ற பசி தடுக்கப்படும். இதன் காரணமாக தொப்பைக் கொழுப்பு மற்றும் எடையை குறையலாம்.
தயிர்:
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. காலை உணவில் தயிர் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இது எடையை குறைப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஏனெனில் தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் எடையையும் வேகமாக குறைக்க உதவும்.