
நாம் வீட்டை எவ்வளவு தான் பெருக்கி, துடைத்து சுத்தமாக வைத்தாலும், வீட்டில் எறும்புகள், பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கும். அதுவும் குறிப்பாக குளிர், மழைக்காலங்களில் இவற்றின் தொல்லை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றே சொல்லலாம்.
மேலும் இவற்றை விரட்டுவதற்கு என கடைகளில் ரசாயனம் கலந்த பொருட்கள் விற்பனையாகின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தினால் அது நம் ஆரோக்கியத்திற்கு தான் கேடு. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டில் இருந்து கரப்பான் பூச்சிகள், பல்லிகள் மற்றும் எறும்புகளை எவ்வளவு விரட்டினாலும் அவை மீண்டும் மீண்டும் வந்து உங்களை தொந்தரவு செய்கிறதா? எனவே இரசாயனப் பொருட்கள் ஏதும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் அவற்றை வீட்டில் இருந்து விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டிலிருந்து கரப்பான் பூச்சிகளை விரட்ட டிப்ஸ்:
பொதுவாகவே வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் தான் கரப்பான் பூச்சிகள் அதிகமாகவே இருக்கும். அவற்றை வீட்டிலிருந்து விரட்டுவது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- உங்கள் வீட்டில் மண்ணெண்ணெய் இருந்தால் கரப்பான் பூச்சியை விரட்டுவதற்கு பயன்படுத்தலாம். ஏனெனில் கரப்பான் பூச்சிக்கு அவற்றின் வாசனை பிடிக்காது. இதற்கு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி அதை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தெளித்தால் கரப்பான் பூச்சி ஓடிவிடும்.
- கரப்பான் பூச்சியை விரட்ட பேக்கிங் சோடா சிறந்த தேர்வு. இதற்கு பேக்கிங் சோடா, சர்க்கரை மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஆகியவற்றை நன்கு கலந்து அதை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வராது.
- கரப்பான் பூச்சிக்கு எலுமிச்சை வாசனை பிடிக்காது. எனவே எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை கரப்பான் பூச்சி தங்குமிடத்தில் வைத்தாலே போதும் ஓடிவிடும்.
வீட்டில் இருந்து எறும்புகளை விரட்ட டிப்ஸ்:
எறும்புகள் வீட்டில் உள்ளவர்களை கடித்து தொல்லை படுத்துவது மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களை சேதப்படுத்தும். வீட்டிற்குள் எறும்புகள் வருவது சுகாதாரமல்ல. எனவே அவற்றை விரட்ட சில வழிகள் இங்கே:
- இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை எறும்புகள் வரும் இடத்தில் டெலிக்கவும் எலுமிச்சையின் வலுவான வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது. எனவே அவை வீட்டை விட்டு ஓடிவிடும்.
- மிளகுத்தூள் பொடியை தண்ணீரில் கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பின் எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் வீட்டிற்குள் நுழையாது. ஏனெனில் எறும்புகளுக்கு மிளகு தூள் வாசனை பிடிக்காது.
இதையும் படிங்க: வீட்டில் 'எலிகள்' அட்டகாசமா? 1 ஸ்பூன் வத்தல் பொடியில் ஓட ஓட விரட்டலாம்!!
வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட டிப்ஸ்:
கொசுக்களின் தொல்லை மலை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாகவே இருக்கும். இதனால் நோய் தொற்றுகள் பரவும். எனவே அவற்றை விரட்ட சில வழிகள் :
- வேப்ப எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெயை சமஅளவு எடுத்து நன்றாக கலந்து அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் தெளித்தால் அவற்றிலிருந்து வரும் கடுமையான வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.
- வீட்டின் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி அறைகளில் கற்பூரத்தை ஏற்றவும். கற்பூரத்தின் புகை வீட்டு முழுவதும் பரவி கொசுக்களை விரட்டும்.
- துளசி, ரோஸ்மேரி, சாமந்தி போன்ற கொசுக்களை விரட்டும் செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கவும். இதனால் கொசு கொள்ளும் வீட்டிற்குள் வராது உங்கள் வீடும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் கரையான் இருக்கா? ஒரு எலுமிச்சை இருந்தால் மொத்தமா ஒழிச்சிடலாம்!!
வீட்டிலிருந்து பல்லியை விரட்டுவது எப்படி?
- வெங்காயத்தை வெட்டி அதை தண்ணீரில் நனைத்து வீட்டின் ஜன்னல் மற்றும் பள்ளிகள் வரும் இடத்தில் வைத்தால், அவற்றிலிருந்து வரும் கடுமையான வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது என்பதால் வீட்டிற்குள் வராது ஓடிவிடும்.
- காபித்தூள் மற்றும் புகையிலை இலைகளின் கலவை பல்லியை விரட்ட உதவுகிறது. இதற்கு புகையிலையின் இலைகளை சிறிய துண்டுகளாக கிழித்து அவற்றுடன் காபி தூள் கலந்து சிறிய உருண்டுகளாக உருட்டி பல்லிகள் வரும் இடத்தில் வைத்து விடுங்கள்.