டீன் ஏஜ் குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ்:
1. பொதுவாக நம் பிறக்கும் போது தன்னம்பிக்கையோடு பிறப்பதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வதன் மூலம் அது மேம்படும். எனவே இன்று முதல் உன் தன்னம்பிக்கையை அதிகரிக்க முயற்சி எடு என்று உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். அதற்கு நீங்களும் அவர்களுக்கு உதவலாம்.
2. ஒருவர் செய்த சாதனையை பற்றிய தகவலை பெறுவது தன்னம்பிக்கை அதிகரிக்க செய்கிறது. எனவே உங்கள் குழந்தை ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கண்டால் அல்லது பேசினால் அதைப்பற்றி விவாதித்து அந்த திசையில் அவர்கள் செல்ல விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
3. எடுத்த உடனே பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. சிறிய காரியங்களை செய்யும் போது, அது சாதனையாக மாறும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் தான் பெரிய காரியத்தை சுலபமாக செய்வதற்கான தன்னம்பிக்கை தானாக உருவாகும்.
4. தன்னம்பிக்கை என்பது கடினமான விஷயங்களை கண்டு ஓடுவது அல்லது தவிர்ப்பது அல்ல. அவற்றை எதிர்கொள்வது தான். எனவே சவால்களை ஏற்றுக் கொண்டு உங்களால் முடிந்ததை கண்டிப்பாக முயற்சி செய் என்று உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். இதன் மூலம் அவர்கள் இது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.