மாத்திரை சாப்பிடும் போது எத்தனை  டம்ளர் தண்ணீர் குடிக்கனும் தெரியுமா? அப்ப தான் நிவாரணம்!!

First Published | Dec 4, 2024, 10:56 AM IST

Medicines and Water : மாதிரி சாப்பிடும்போது சிலர் தண்ணீர் குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீர் குடிக்காமல் அப்படியே முழுங்கி விடுவார்கள். உண்மையில், மாத்திரை சாப்பிடும் போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.

How Much Water To Drink With Medicines In Tamil

பொதுவாக நாம் காய்ச்சல், சளி, இருமல், இதய நோய், சக்கர நோய் போன்ற நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்வோம். மேலும் மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது சிலர் தண்ணீர் குடிப்பார்கள். இன்னும் சிலரோ தண்ணீர் குடிக்காமல் மாத்திரையை மட்டும் அப்படியே விழுங்கிவிடுவார்கள். ஆனால்,  தண்ணீர் குடிக்காமல் மாத்திரையை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

How Much Water To Drink With Medicines In Tamil

உண்மையில் நாம் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில், அப்போது தான் மாத்திரை தண்ணீருடன் சேர்ந்து விரைவில் கரைந்து நம் உடலில் விரைவாக சென்றடையும். அதுமட்டுமின்றி, அதன் பலனை நம் சரியாக பெறாமல் முடியும். அதுபோல, நாம் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரியாது. எனவே, மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:  டீ, காபியுடன் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!


How Much Water To Drink With Medicines In Tamil

மாத்திரை சாப்பிடும் போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் அளவை குறித்து தண்ணீரின் அளவு மாறுபடும். அதாவது மருந்தின் அளவு அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்ப தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் கண்டிப்பாக குடிக்க வேண்டும். வேண்டுமானால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.

How Much Water To Drink With Medicines In Tamil

தண்ணீர் குடிக்காமல் மாத்திரை சாப்பிட்டால் என்ன ஆகும்?

மாத்திரை சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். மேலும் அல்சர் போன்ற நோய்களின் அபாயத் அதிகரிக்கும். எனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைக்கு ஏற்ப தண்ணீர் கண்டிப்பாக குடியுங்கள்.

இதையும் படிங்க:  தலைவலி, காய்ச்சலுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை சாப்பிடுறீங்களா? அதிக ஆபத்து!

How Much Water To Drink With Medicines In Tamil

இவற்றை நினைவில் கொள்:

- மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது சூடான நீரை குடிப்பது ரொம்பவே நல்லது இதனால் மாத்திரையின் விரிவாக கரைந்துவிடும்.

- பலர் மாத்திரை சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அது நல்லதல்ல. மாத்திரை சாப்பிட்ட பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும் அப்போதுதான் மாத்திரை உடலில் வேகமாக சென்றடையும்.

- மேலும் மாத்திரை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தான் உணவை சாப்பிட வேண்டும். உணவுக்கு முன்பாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அரமாணி நேரத்திற்கு முன்பாகவே மருந்து சாப்பிடுங்கள்.

- முக்கியமாக மாத்திரையை பால் ஜூஸ் போன்றவற்றுடன் ஒருபோதும் சாப்பிட வேண்டாம் இல்லையெனில் மாத்திரை கரைய நீண்ட நேரம் ஆகும்.

Latest Videos

click me!