வாட்டர் டேங்கில் பாசியா? உள்ளே இறங்காமலே 'ஈஸியா' சுத்தம் செய்ய சூப்பரான '1' டிப்ஸ்!! 

Published : Jan 29, 2025, 04:58 PM IST

Water Tank Cleaning Tips : தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்காமல் வெளியில் இருந்தபடியே அதனை சுத்தம் செய்வதற்கு தேவையான குறிப்புகளை இங்கு காணலாம். 

PREV
14
வாட்டர் டேங்கில் பாசியா? உள்ளே இறங்காமலே 'ஈஸியா' சுத்தம் செய்ய சூப்பரான '1' டிப்ஸ்!! 
வாட்டர் டேங்கில் பாசியா? உள்ளே இறங்காமலே 'ஈஸியா' சுத்தம் செய்ய சூப்பரான '1' டிப்ஸ்!!

தண்ணீர் தொட்டிக்குள் தினமும் தண்ணீரை நிரப்பும் போது அதில் தூசிகள், அழுக்குகள் படிய வாய்ப்புள்ளது. நாளடைவில் பாசியும் படியத் தொடங்கும். இதனால் சில நாட்களிலே தண்ணீரில் இருந்து கெட்ட வாசனை வீச ஆரம்பிக்கும்.  புழுக்கள், பாக்டீரியாக்களும் வர தொடங்கி விடும். இந்த சூழலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. தண்ணீர்த் தொட்டிக்குள் பாசி வராமல் தடுக்க சில வழிகள் இருந்தாலும் அதையும் மீறி பாசிகள் வரும்போது, தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்துதான் ஆக வேண்டும். இந்த பதிவில் எளிமையான முறையில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்காமல் எப்படி சுத்தம் செய்வது என்பதை காணலாம். 

24
வாட்டர் டேங்க் சுத்தம்:

நம் நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளில் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட டேங்குகளை காண முடியும். வீட்டில் எப்போதும் தண்ணீர் வரும் வகையில் தண்ணீர் தொட்டியை நிரப்பி வைத்திருப்பார்கள். தண்ணீர் தொட்டியை வைத்திருப்பதை விட அதை முறையாக கழுவி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது. ஏனென்றால் அசுத்தமான நீரை பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு நோய்களை கொண்டு வரும். பெரிய டேங்குகளை உள்ளே இறங்கி சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான காரியமாக இருக்கலாம். இந்த சிரமம் ஏற்படாமல் தடுக்க ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. இந்த முறையை பயன்படுத்தினால் நீங்கள் தொட்டிக்குள் இறங்காமல் வெளியில் நின்றபடியே வாட்டர் டேங்க்கின் அசுத்தங்களை சுத்தம் செய்ய முடியும். 

இதையும் படிங்க:  கீசர் இல்லாமலே சுடச்சுட வெந்நீர் வேணுமா? வாட்டர் டேங்கில் இதைச் செஞ்சு பாருங்க!

34
தேவையான பொருள்கள்:

உங்கள் வீட்டில் இருக்கும் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாட்டில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருப்பது நல்லது. ஒரு நீளமான பிவிசி பைட் (PVC Pipe), டேப், ஓஸ் எனப்படும் தண்ணீர் பாய்ச்சும் குழாய் ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க:  உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!

44
எப்படி சுத்தம் செய்யலாம்?


 நீங்கள் எடுத்துக் கொண்ட பாட்டிலை நடுவில் வெட்டுங்கள். இரண்டு துண்டுகளின் அதன் வாய் பகுதி இருக்கும் துண்டினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பகுதியில் மூடி உள்ள  இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபக்கத்தை வெட்டிவிடுங்கள். இந்த பகுதியில் பிவிசி குழாயை பொருத்த வேண்டும். இதன் மீது குழாய் விலகாமல் இருக்க டேப் வைத்து ஒட்டிக் கொள்ளுங்கள். பிவிசி குழாயின் இன்னொரு பகுதியில் ஓஸ் இணைக்க வேண்டும். அனைத்தையும் இணைத்த பிறகு பாட்டிலின் வெற்றிடம் உள்ள பகுதியை தண்ணீர் தொட்டிக்குள் நுழைத்து, ஓஸின் மறுபக்கத்தில் வாயால் உறிஞ்ச வேண்டும். இப்போது தொட்டியில் உள்ள அழுக்கு தண்ணீர் வெளியேற தொடங்கும். இதன் பின்னர் தொட்டியில் உள்ள அழுக்கு படிந்த இடத்தையும் பாசிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறையில் தொட்டியில் படிந்துள்ள உப்பு நீர் கூட வெளியே வந்துவிடும் இதற்கான பல வீடியோக்கள் youtube இல் கொட்டி கிடைக்கின்றன. குழப்பம் இருந்தால் அதை ஒரு முறை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories